இலங்கையின் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் சட்டங்கள் – பகுதி 1
இலங்கையில் அண்மைக்காலங்களில் சமூக பொருளாதர கட்டமைப்பில் பெண்களின் தொழில்சார் பங்களிப்பும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக உயர்கின்றது. பெண்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில்; 36.4% தொழிலாளர் படையில் உள்ளடங்குகின்றனர். இது ஆண்களின் தொழிலாளர் படையின் பங்களிப்பு வீதத்திலும் அரைவாசியிலும் குறைவாக இருப்பினும் அவர்களில் வேலை வாய்ப்பு வீதம் 92.7% ஆக இருப்பதால், ஆண்களுடன் ஒப்பிடுகையில்; 4.1%மட்டுமே குறைவானது. இலங்கையில் மொத்த வேலையாட்களில் 34.4%பெண்களாவர். பெண் வேலையாட்களில் 38.4% தனியார்துறையிலும், 19.9% அரசதுறையிலும் […]