சட்டவியல் : இயற்கை நீதி சட்ட சிந்தனைப்பிரிவு – அடிப்படை
இயற்கை சட்டமென்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டமல்ல. இது எழுத்த்pல்
காணப்படாது. இது மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாகும். சட்டமானது
வலிதானதாக இருப்பதற்காக அது இயற்கைச்சட்ட கொள்கைகளுக்கு அமைவானதாக
இருக்கவேண்டும் என்பது இயற்கைசட்டவியலாளர்களின் நிலைப்பாடாகும்.
இது சட்டத்தின் அடிப்படையாக தார்மீக கடமையையும் அனுபவ நீதியையும் உள்ளடக்கியது.
ஆரம்பகால இயற்கை சட்டவிதிகள் கிரேக்க,ரோமானிய தத்துவாசிரியர்களால்
வளர்த்தெடுக்கப்பட்டது. சோக்கிரட்டீஸ் மனிதர்களால் உருவாக்கப்படும் சட்டத்திற்கு
எதிரான கருத்துக்களை முன்வைத்தார். உண்மையான நீதியையும் நியாயத்தையும்
வழங்கக்கூடிய தத்துவாசிரிய அரசன் எனும் எண்ணக்கருவை உருவாக்கினார்.
அரிஸ்டோட்டில் இயற்கை நீதிக்கு ஆதரவு வழங்கியதுடன் அவை தொடர்ச்சியாக
வளர்ச்சியடைய வேண்டும் என கூறினார். இவற்றுக்கு மேலதிகமாக பல்வேறு துறைகளில்
திறமைவாய்ந்த கிரேக்க ஆசிரியர்கள், உறுதிப்பாட்டுவாத குழுமத்தை(Stoics)
சேர்ந்தவர்களின் கருத்துக்களும் இயற்கைச்சட்ட கொள்கையின் வளர்ச்சிக்கு
முக்கியமானது.
மத்தியகாலத்தில் கிறீஸ்தவமதம் பரவத்தொடங்கியபின் சமயம் சார்ந்ததாக இயற்கை
சட்டம் விருத்தியடைய தொடங்கியது. இக்காலத்திற்குரிய அகஸ்ரின் இறைவனின்
விருப்பமே சட்டமாக அமையமுடியும் என கூறினார். இயற்கை சட்டம் மனித
விழுமியங்களை உள்ளடக்கியதாக அறியப்படும் சட்டம் என தோமஸ் அக்குயினஸ்
கூறினார். மேலும் இயற்கை நீதியுடன் முரண்படாமல் மனிதர்களால் உருவாக்கப்படும்
சட்டங்களையும் இவர் ஆதரிக்கின்றார்.
மறுமலர்ச்சிக்காலத்தில் ஹோப்ஸ், லொக்கி, ரூஷோ போன்ற சட்ட அறி;ஞர்களால் சமூக
ஒப்பந்த கொள்கைகளினூடாக இயற்கை சட்ட விதிகளை தெளிவுபடுத்தினர். ஹோப்ஸ்,
முழுமையான அரசாங்கத்தையும், லொக்கி மட்டுப்படுத்தப்ட்ட அரசாங்கத்தையும்
ஆதரித்ததோடு ரூஷோ மக்களின் பொதுவிருப்ப கொள்கையை
முக்கியத்துவப்படுத்தினார். பின்னர் புலனறிவாத சட்ட கொள்கை வளர்சியடைந்த பின்
இயற்கை சட்டத்தின் செல்வாக்கு குறையத்தொடங்கியது.
பின்னர் நாடுகளிடையேயான யுத்தத்தின் விளைவுகளால் தொடர்ச்சியாக தார்மீக
கடமைகள் சட்டத்தில் உட்பொதிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள்
வலுப்பெறத்தொடங்கின. அந்தவகையில் தார்மீக கடமையும் சட்டமும் வேறுபட்டது என்ற
கருத்தில் புலனறிவாத குழாத்தை சேர்ந்த ஹார்ட் வெளியிட்ட் ஆய்வறிக்கைக்கையை
விமர்சித்து நவீன இயற்கைசட்டவியல் குழாத்தை சேர்ந்த புல்லர் எனும் அறிஞரால்
வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளில் உள்ளடங்கிய பதில்களும் ஹார்ட் – புல்லர்
விவாதம் என அறியப்படுகின்றது. இது சட்டத்திற்கும் தார்மீக கடமைகளுக்கும்
இடையிலான தொடர்பு பற்றி விரிவாக ஆராய்கின்றது.
குருஜ் இன்போமர் வழக்கின்(The Grudge Informer Case – German Court of Appeal) தீர்ப்பை உள்ளடக்கி ஜேர்மன் சட்டவியலாளர் றட்புரு 1946ல் வெளியிட்ட கட்டுரை(Gustav Radbruch (1946) Statutory Lawlessness and Supra-Statutory Law) ஹார்ட் – புல்லர் விவாதத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இந்த வழக்கில் பெண்ணொருவர,; இது கணவர் அந்நாட்டு அதிபர் ஹிட்லரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் பேசியதாக அதிகாரிகளிடம் முறையிட்டார்.அதன் அடிப்படையில் கணவர் குற்றவாளியாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அது நிறுத்தப்பட்டு போர் முன்னரங்குக்கு அனுப்பப்பட்டார். 1949ல் குறித்த
பெண்ணுக்கெதிராக கணவனி;ன் சுதந்திரத்தை சட்டரீதியற்ற முறையில் பறித்தமைக்காக வழக்கிடப்பட்டது. அரசுக்கெதிராக கருத்து வெளியிடல் 1891ம் ஆண்டின் ஜேர்மன் தண்டணைச் சட்டகோவைக்கு அமைவாக குற்றமாகும். நாட்டின்
சட்டமுறைகளுக்கமைவாகவே தான் செயற்பட்டதாக குறித்தபெண் எதிர்வாதம் செய்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இது தீர்ப்பில் கணவரின் சுதந்திரத்தை பறித்தமைக்காக
குற்றவாளியாக்கப்பட்டார்.
இங்கு ஹார்ட் சட்டத்திற்கும் தார்மீக கடமைக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என
அவசியமில்லை என கூறினார். அத்துடன் அவை ஒன்றுடனொன்று தங்கியிருக்கவில்லை
எனவும் கூறினார். குறித்தபெண் தார்மீககடமையை மீறியுள்ளாரே தவிர சட்டக்கடமையை மீறவில்லை என்றார். நியதிச்சட்டங்கள் சொற்களுக்கமைவாகவே பொருள்கோடல் செய்யப்பட வேண்டும் என மேலும் கூறியிருந்தார்.
ஹார்ட்டின் கருத்துக்கு பதிலுரைக்கும் வகையில் புல்லர் இது ஆய்வறிக்கையை
வெளியிட்டார். அதன்படி தார்மீக கடமை சட்டத்தின் உள்ளார்ந்த பகுதியாக
இருக்கவேண்டும் என கூறினார். தார்மீக கோட்பாட்டிற்கமைவாக உருவாக்கப்படாத
சட்டம் வலிதற்றது(void ab initio) என்றார்.
ஒரு சட்டம் வலுவுள்ளதாக இருப்பதற்கு
தார்மீக தொழிற்பாட்டு பரீட்சைக்கு உட்பட வேண்டும் என்றார். இந்த பரீட்சைக்கு
அமைவாக 8 முன்நிபந்தனைகள((1) பொதுமைப்பாடானது (2) சகலரும் அறியக்கூடியது (3) தெளிவானது; (4) இலகுவாகவிளங்கக்கூடியது (5) முரணற்றதாக இருத்தல் (6) ஒப்பீட்டளவில் நிலையானது7) கட்டுப்படகூடியதாகஇருத்தல் (8) சட்டத்தில் கூறப்பட்ட சொற்களின் அர்த்தத்திற்கு அதிகளவில் விலகாமல் பொருள்கோடல் செய்யப்படவேண்டும்) பூர்த்தி செய்யப்படவேண்டும்.
மேலும் ஹார்ட்டின் கடுமையான நியதிச்சட்ட பொருள்கோடல் அணுகுமுறையை எதிர்த்தார். குருஜ் இன்போமர் வழக்கில் நீதிமன்றம் தார்மீககோட்பாட்டை அறிமுகப்படுத்தி பெண்ணை குற்றவாளியாக்கியமையை ஹார்ட் எதிர்த்தார். எவ்வகையான சட்டங்களாக இருப்பினும் அவை அரசினால் உருவாக்கப்பட்டதாக இருந்தால் அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என மேலும் வலியுறுத்தினார். ஆனால் இந்தக்கருத்தினை முற்றிலும் மறுத்த புல்லர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என நியாயப்படுத்தினார். ஹிட்லர் காலத்தி;ல் இருந்தவை சட்டமாகவே கருத முடியாது என்றும், அவை தார்மீக கடமைகளுக்கு அமைவானவையல்ல என்றும் கூறினார்.
FacebookWhatsAppViberMessengerTelegramTwitterLinkedInPinterestGmailMessageCopy LinkEmailRedditPrint