மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 6 (இறுதி பகுதி)
6. கடவுச்சீட்டு சட்டத்தின் உபபிரிவு 10(3)(உ) அரசியலமைப்பின் 19(1)(a), 19(1)(g ) ஐ மீறுகின்றதா என்பது பற்றிய பகுப்பாய்வு இங்கு வாதி உறுப்புரை 19(1)(a ) வெளிநாடு செல்வதற்கான உரிமையானது பேச்சு மற்றும் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதி என குறிப்பிட்டார். வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டம் அல்லது நிர்வாக நடவடிக்கையானது பேச்சு மற்றும் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். நீதியரசர் பகவதி இந்த வாதத்தை மறுத்ததுடன் உறுப்புரை 19(1)(a ) ஆனது வெளிநாடு செல்லும் உரிமையை […]