கடந்தகால பயன் கொண்ட சட்டவாக்கமும் அரசியலமைப்பும்

கடந்தகால பயன் கொண்ட சட்டவாக்கமும் அரசியலமைப்பும்

பொதுச்சட்ட நாடுகளின் அரசியலமைப்புகள் பொதுவாக கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கத்தினை அனுமதிப்பதில்லை. உதாரணமாக அமெரிக்காவின் அரசியலமைப்பு உறுப்புரை 1 பிரிவு 9 வசனம் 3 மற்றும் பிரிவு 10 கடந்கால பயன் கொண்ட சட்டவாக்கத்தை தடுக்கின்றது.

எனினும் வெஸ்ட் மினிஸ்டர் முறையினை பின்பற்றும் நாடுகளில் கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கம் சாத்தியமாகின்றது ஏனெனில் பிரித்தானியா போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மை இதற்கான பிரதான காரணமாகும்.

பொதுவாக மனித உரிமைகளை உள்ளீர்த்துள்ள நாடுகளின் அரசியலமைப்புகள் இதனை மறுப்பதினை காணலாம். UDHR உறுப்புரை 11 பந்தி 2 கடந்தகாலத்தை பாதிக்கும் குற்றவியல் சட்டவாக்கத்தினை தடுக்கின்றது. அதேபோல ஐரோப்பிய மனித உரிமைகள் சமவாயம் உறுப்புரை 7 உம் இதனை ஒத்திருப்பதனை காணலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் அத்தியாயம் உறுப்புரை 13 பின்வருமாறு ஏற்பாடு செய்கின்றது “புரியப்பட்ட நேரத்தில் தவறொன்றாகவிருந்திராத ஏதேனும் செயல் அல்லது செய்யாமை காரணமாக, ஆளெவரும் தவறொன்றுக்கு குற்றவாளியாதலாகாது என்பதுடன், அத்தவறு புரியப்பட்ட நேரத்தில் வலுவிலிருந்த தண்டத்திலும் பார்க்க கடுமையான தண்டமெதுவும் அத்தகைய ஏதேனும் தவறுக்கு விதிக்கப்படதலுமாகாது”.

இவ் உறுப்புரை இலங்கை அரசியலமைப்பு கடந்தகால பயன்கொண்ட அல்லது பின்னோக்கி ஆளும் குற்றவியல் சட்டங்கள் வலிதற்றதாக காணப்படுகின்றது.

பொதுவாக கடந்தகால பயன் கொண்ட குற்றவியல் சட்டவாக்கம் சட்டவாட்சிக்கு எதிரானதாகவும் தனிப்பட்டவர்களின் உரிமையினை பாதிப்பதாக காணப்படுகின்றது. எனவே பெரும்பாலான நாடுகளின் அரசியலமைப்புகள் இதனை தடுப்பதாக காணப்படுகின்றது. எனினும் பிரித்தானியா, ஐரோப்பிய மனித உரிமைகள் சமவாயத்தினை ஏற்று கொண்டாலும் நடமுறையில் அதனை மீறி சட்டங்கள் உருவாக்கப்படுவதினை காணலாம். உதாரணமாக war crime act 1991 மற்றும் criminal justice act 2003 போன்ற சட்டங்களை குறிப்பிடலாம்.

பாராளுமன்ற மீயுயர் தன்மை காரணமாக பிரித்தானியாவில் இது சாத்தியப்படுகின்றது. இலங்கை அரசியலமைப்பு உறுப்புரை 75 பாராளுமன்றம் கடந்தகால பயன் கொண்ட சட்டவாக்கத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது. எனினும் உறுப்புரை 13 குற்றவியல் சட்டவாக்த்தினை தடுக்கின்றது. ஆயினும் இலங்கை அரசியலமைப்பு பலவீனமான ஓர் தடுப்பினையே கொண்டிப்பதனை காணலாம்.

கடந்தகால பயன் கொண்ட குற்றவியல் சட்டவாக்கமே பெரும்பாலான நாடுகளில் தடுக்கப்படுகின்றது எனினும் குடியியல் சட்டவாக்கங்கள் அனுமதிக்கப்படுகின்றது. Calder v. Bull என்ற அமெரிக்க வழக்கில் அரசியலமைப்பு தடையானது குற்றவியல் விடயங்களுக்கு மட்டுமே பொருந்துமே ஒழிய குடியியல் விடயங்களுக்கல்ல என கூறப்பட்டது.

பொதுவாக அரசியலமைப்புவாதம் கொண்ட நாடுகளில் குற்றவியல் சட்டவாக்கம் தொடர்பாக பலமான தடையினை கொண்டுள்ளதை காணலாம் எனினும் குடியியல் விடயங்களுக்கு அனுமதிகாணப்படுகின்றது. பாராளுமன்ற இறமைக்கு முக்கிமளிக்கும் நாடுகளின் அரசியலமைப்புகள் கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கத்தினை தடுப்பதில் பலவீனமானவையாகவே காணப்படுகின்றன.

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US