சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 1
பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி இன்று வெளிவருகின்றது. அரசு சார்பாக உத்தியோகபூர்வமாக தொழிற்படும் அதிகாரிகள் உயர்நிலையிலோ அல்லது கீழ் நிலையிலோ இருப்பினும் அவர்களினால் நிறைவேற்றப்படும் செயல்கள் அரசினால் செய்யப்பட்டவையாக கருதப்படும். இந்த கூற்றானது சர்வதேச சட்ட ஆணைக்குழுவால் (ஐ.எல்.சி) 2001ல் வெளியிடப்பட்ட சர்வதேச ரீதியிலான […]