இலங்கை பொருள் விற்பனை சட்டத்திலுள்ள குறைபாடுகள்
அறிமுகம்
இலங்கையில் பொருட்கள் விற்பனை தொடர்பில் உருவாக்கப்பட்ட 1896ம் ஆண்டின் 11ம் இலக்க பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டம1;, 1893ல் உருவாக்கப்பட்ட இங்கிலாந்தின் பொருள் விற்பனைச் சட்டத்தை ஒத்தது. பின்னர் இங்கிலாந்தின் சட்டம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக புதிய சட்டமொன்று 1979 உருவாக்கப்பட்டது. அச்சட்டமும் பல திருத்தங்கள் மூலம் விரிவாக்கப்பட்டது. எனினும் நவீன வர்த்தக மாற்றங்களுக்கமைவாக 125 வருட பழமை வாய்ந்த இலங்கையின் பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இங்கு சொத்துவம் மற்றும் ஊறு கை மாற்றப்படுதல் தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் மற்றும் தற்கால வர்;த்தக நடைமுறையில் மேற்படி ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாமை தொடர்பிலம் விரிவாக ஆராயப்படவுள்ளது. S.17 ல் நிச்சயமற்ற(Unascertained)பொருட்களின் விற்பனை ஒப்பந்ததம் தொடர்பில்; நிச்சயமற்ற பொருட்கள் பற்றிய வரைவிலக்கணம் சட்டத்தில் காணப்படவில்லை. இதனால் நிச்சயமற்ற பொருட்களின் விற்பனை ஒப்பந்தம் தொடர்பான பொருள்கோடல்களில் சிக்கல்நிலைகாணப்படுகின்றது. அத்துடன் சர்வதேச வர்த்தகதத்pல் கொள்வனவாளருக்கு சொத்துவம் கைமாறமுன்னரே ஊறு கைமாற்றமடைவதால் பொருள் விநியோகிக்ப்படமுன் ஏற்படும் சேதங்களுக்கும் பொறுப்பாக்கப்படலாம். அத்துடன் இரு நாடுகள் சம்பந்தப்படுவதால் எந்தநாட்டின் நியாயாதிக்கத்தை தெரிவு செய்வத தொடர்பிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன அத்துடன் சட்டத்தின் S.34(1), S35 க்கிடையில் பொருட்களின் ஏற்பு தொடர்பில் முரண்பாடு காணப்படுகின்றது.
மேலே கூறப்பட்டவற்றை தவிர்தது மேற்படி சட்டத்தில் விற்பனைத்தரம் தொடர்பிலான பொருள்கோடல சிக்கல்;, ; அத்துடன் மென்பொருட்கள் உட்பட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி குறிப்பிடாமை போன்ற குறைபாடுகளும் காணப்படுகின்றன
சொத்துவம், ஊறு கைமாற்றப்படல் தொடர்பாக சட்டத்திலுள்ள ஏற்பாடுகள்
விற்பனை ஒப்பந்தத்தின் விளைவுகள் தொடர்பாக பெருட்கள் விற்பனைக் கட்டளைச்சட்டத்தின் பகுதி 2 ல் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் Pபாருளின் சொத்துவம் மற்றும் ஊறு கைமாற்ப்படல் தொடர்பான விடயங்கள் Uள்ளடக்கப்ட்டுள்ளது. அதிலும் விற்கப்பட்ட பொருளின் சொத்துவம் மற்றும் ஊறு கைமாற்றம் தொடர்பான விடயங்கள் பிரிவுகள் 17 தொடக்கம் 21 வரை எடுத்து கூறப்ட்டுள்ளது. 1930ம் ஆண்டின் இந்திய பொருள் விற்பனைச்சட்டத்தின் பிரிவுகள் 18 தொடக்கம் 26 வரை எமது சட்டத்தiயொத்த அதே ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
பிரிவு 17ல் குறித்தொதுக்கப்பட்ட மற்றும் நிச்சயமான பொருட்கள் தொடர்பான விற்பனையில் மட்டுமே பொருளின் சொத்துவம் கைமாற்றப்படும் என குறிப்பிடப்பட்டள்ளது. இங்கு நிச்சயமான பொருட்கள் தொடர்பில் வரைவிலக்கணம் கூறப்படாமையால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி அடுத்த பகுதியில் ஆராயப்படும்.
பிரிவு 18ல் விற்பனை ஒப்பந்த்தின் தரப்பினர் பொருளை கைமாற்றுவதாக எண்ணும் போதே சொத்துவம் மாற்றமடைவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தரப்பினரின் மனஎண்ணத்ததை தீர்மானிப்பதில் ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் கட்டுறுத்துக்கள், நடத்தை, குறித்த நிகழ்வின் போதான சூழ்நிலைகள் போன்றன கருத்தில் எடுக்கப்படும்.
பிரிவு 19ல் தரப்பினரின் மனஎண்ணத்தை கண்டறிவதற்கு 5 விதிகள் அடையாளப்படுத்தப்பட்டு;ளது.
மன எண்ணத்தை திட்டமான தீர்மானித்தல் தொடர்பில் குழப்பம் ஏற்படுமிடத்து மேற்படி விதிகள் ஆராயப்படும். நிபந்தனையற்ற குற்த்தொதுக்கப்ட்ட கையாளத்தக்கf(Deliverable State) நிலையில் காணப்படும் பொருள் விற்பனையில் தரப்பினர் ஒப்பந்தத்தை நிறைவேற்றியவுடன் சொத்துவம் கைமாற்றமடையும் என விதி 1 கூறுகின்றது. இங்க பணம் செழுத்துதல், கையளிப்பதற்கான காலப்பகுதி போன்றனகவணத்திலெடுக்கப்படமாட்டாதU.
ஏனைய 4 விதிகளும் நிபந்தனை விற்பனை ஒப்பந்ததத்pற்கு பொருந்தும். குறித்தொதுக்கப்பட்ட பொருள் தொடர்பான ஒப்பந்தமெதன்றில் கையாளத்தக்கநிலையில் பொருள் இல்லாதபோது அது கையாளதத்க்கநிலைக்கு மாற்றப்பட்டபின் கொள்வனவாளருக்கு அறிவிக்கப்பட்வுடனேயே சொத்துவம் கைமாற்றமடையும் என விதி 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையாளத்தக்க பொருளாக இரப்பினும் அத தொடர்பில் நிறுத்தல், அளவிடல், பரிசோதனை அல்லத பொருளின் விலையை உறதிப்படுத்தும் ஏதேனம் செயற்பாடுகள் செய்யவேண்டியிருப்பின் அவ்வாறு செய்யப்பட்டபின் கொள்வனவாளருக்கு அறிவித்தபின்னரே சொத்துவம் கைமாற்றமடையும் என விதி 3 ல் அடையாளப்புடத்தப்பட்டுள்ளது.
விற்பனை அல்லது மீளவழங்கல் மற்றும் கொள்வனவாளரின் அனுமதி தொடர்பான விற்பனைகளில் அவை தொடர்பில் விற்பனையாளருக்கு தனது ஏற்பினை அறிவிக்கும் போத சொத்துவம் கைமாற்றமடையும் என விதி 4 கூறுகின்றது. மேலும் ஏற்பு தொடர்பில் ஏதேனும் காலப்பகுதி விதிக்கப்ட்டிருந்தால் அக்காலப்பகுதியின் முடிவிலோ அல்லது நியாயயமான காலப்பகுதியின் மடிவிலோ சொத்தவம் கைமாற்றமடையும். விதி 5ல் விவரணத்துடனான நிச்சயமற்ற மற்றும் உதிர்கால பொருட்கள் தொடர்பிலான நிபந்தரனயற்ற ஒப்பந்தமானது தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது சொத்துவம் கைமாற்றமடையும் என கூறப்பட்டுள்ளது.
குறிthதொதுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான நிபந்தனை ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை விற்பனையாளல் கையுதிர்க்கuம் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்கமுடியும். இதனால் சொத்துவமும் கைமாற்றப்படமாட்டாது. Bill of Lading முறையில் விற்பனை இடம்பெறும் போதும் அததொடர்பான நிபந்தனைகள் நிறைவேற்றபப்டடாதவிடத்து மேற்குறித்த விளைவையே தரும்.
சொத்துவம் கைமாற்றப்பட்டவுடன் அதனுடன் இணைந்தே ஊறும் கைமாற்றமடையம் என்பது முகத்தோற்றளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என பிரிவு 21 ல் கூறப்பட்டடுள்ளது. எனினும் கைமாற்றுதல் தொடர்பில் தாமதப்படுத்தலை நிகழத்தம் தரப்பு பொறுப்பாக்கக்ப்படுவர். அத்துடன் சர்வதேச வர்த்தகத்தின் CIF, FOB தொடர்பான விற்பனையில் கப்பில் பொருட்கள் ஏற்றபப்ட்டவுடனேயே ஊறு கொள்வனவாளருக்கு கைமாற்றப்படுவதுடன் ஏனைய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே சொத்துவம் கைமாற்றப்படும்.
சொத்துவம், ஊறு கைமாற்றப்படல் தொடர்பான நவீன கால பிரச்சினைகள்
பொருட்கள விற்பனைச்சட்டத்தின் பிரிவு 17ல்; நிச்சயமற்ற(Unascertained)பொருட்களின் விற்பனை ஒப்பந்தத்தில்; அப்பொருள் உறுதிப்படுத்தப்படும் வரை அதன் சொத்துவம் கைமாற்றமடையாது எனக்கூறப்பட்டுள்ளது. எனினும் நிச்சயமற்ற பொருட்கள் பற்றிய வரைவிலக்கணம் சட்டத்தில் காணப்படவில்லை.
இலங்கைச்ச சட்டத்தில் குறித்தொதுக்கபப்ட்ட பொருட்கள், நிச்சயமற்ற பொருட்கள் என இரு தனித்துவமான பதங்கள் பாவிக்ப்பட்டுள்ளன. எனினும் நிச்சயமற்ற பொரட்களை முழமையான நிச்சயமற்ற பொருட்கள், அரை குறித.தொதுக்கப்பட்ட பொரட்கள்Quasi Specific) என வேறுபடுத்த முடியம் என வர்தத்கவட்வறிஞரான மக்கென்றிக் கூறியுள்ளார். எந்த மூலத்திலிருந்து பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றத என அறியப்படாதவடத்து அது முழமையான நிச்சயமற்ற பொரட்கள் எனப்படுகின்றன.
ஒரு அடையாளப்படடுத்தப்பட்ட பெரியதொகுதியிலிருந்து குறித்தளவு போருட்கள் விநியோகிக்கபப்டின் அது அரை குறித்தொதுக்கப்பட்ட பொருட்கள் எனப்படும். உதாரணமாக கறித்த கப்பலிலிருந்த வரம் 100 தொன் சீனி தொகதியிலிந்து; 10 தொன் சீனி தொடர்பான விற்பனை இந்தப்பிரிவுக்குள் அடங்கும்.
அரை குறித.தொதுக்கப்பட்ட பொரட்களும் நிச்சயமற்ற பொருட்களின் வகுதிக்குள் அடங்கவதால் பிரிவு 17ன் கீழ் தவிர்க்கப்பட கூடிய சாத்தியங்கள் உள்ளன. நிச்சயமற்ற பொருட்கள் தொடர்பில் கொள்வனவாளருக்கு விற்பனையாளருக்தெரிராக ஒப்பந்த ரீதியான உரிமைகள் மட்டுமே காணப்படுமட. பொருட்கள் தொடர்பில் எவ்வித உரிமையம் காணப்படாது. இவ்வாறான சந்தர்பப்த்தில் விற்பனையாளர் பொருட்களை வகையற்ற சூழ்நிலையினாலோ இல்லத வேற காரணத்தினாலோ கையளிக்கமுடியாது போனால் கொள்வனவாளரால் வழக்கு தாக்கல் செய்த பொருளின் சொத்துவத்தை அடையமுடியாது. மேலும் பிரிவு 51 ன் கீழான குறித்த நிறைவேற்றம் தொடர்பான நிவாரணமுத்குறித்தொதுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பிலேயே தொழிற்படும்என்பதால் இப்பிரிவு மூலமும் நிpவாரணம் பெறமுடியாது.
இங்கிலாந்தின் ;சட்டத்தின் பிரிவு 16ம் இலங்கைசச்ட்டத்தின் பிரிவ 17ம் ஒரே விடயங்களையே கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு தொடர்பிலுள்ளகறைபாடு றி வெய்ற்8 வழக்கில் பிரதிபலித்தது. இங்கு சலஞ்சர் எனும் கப்பலில் வந்த 1000 தொன் மாவிலிருந்த 500 தொன் மா விற்றபனை தொடர்பன விற்பனையில் விற்றபனையாளர் வகையற்றவராக அறிவிக்கப்பட்ட நிலையில், பொருட்கள் நிச்சயமற்றவையாக இருப்பதால் பொருளின் சொத்துவம் கைமாற்றப்படவில்லை என தீர்கக்ப்பட்டது. றி கோல்ட் கோப் எக்ஸ்சேன்ச் வழக்கில் விற்பனையாளரிமழரந்து ஆபரணமாக மாற்றப்படாத தங்கம் வாங்கியநிலையில் அவர் வகையற்றவராக மாறிய நிலையலி; வாங்கியபொருள் நிச்சயமறற பொருள் என்ற அடிப்படையில் சொத்துவம் கைமாற்றப்படவில்லையென தீர்க்கபப்ட்டது.
சர்வதேச வர்த்தகதத்pல் கொள்வனவாளருக்கு சொத்துவம் கைமாறமுன்னரே ஊறு கைமாற்றமடையம். குறிப்பாக CIF, FOB தொடர்பான விற்பனையில் கப்பில் பொருட்கள் ஏற்றபப்ட்டவுடனேயே ஊறு கொள்வனவாளருக்கு கைமாற்றப்படும். இதனால் பொருள் கையளிக்கப்பட முன்; ஏற்படும் சேதங்களுக்கும் கொள்வனவாளர் பொறுப்பாக்கப்படலாம். இந்த சிக்கல் நிலை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பொருட்கள் விற்பனை ஒப்பந்த சமவாயத்தில் பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கிலாந்தின் 1979ம் ஆண்னெ; புதிய பொருள்விற்பனைச்சட்டத்தின் மூலமும் பாதிப்புக்கள் குறைக்கபப்ட்டுள்ளது.
அதாவது S.34(1) ல் பொருளை பரிசோதிப்பதற்கு போதுமான சர்ந்தப்பம் வழங்கப்படாத நிலையில், இப்பொருட்களை பரிசோதனை செய்யாமல் வாங்கும் போது, ஏற்கப்பட்டதாக கருதப்படாது. எனினும் S35 ல் வாங்கப்பட்ட பொருளொன்றை விற்பனையாளரின் சொத்துவத்திற்கு முரணாக ஏதும் நடவடிக்கைகளை செய்யும் போது ஏற்பாக கருதப்படலாம் என்கிறது. இந்நிலையில் பரிசோதனை செய்யாமல் பொருளொன்றை வாங்கியபின் அதநை துணை கொள்வனவாளரொருவருக்கு மீள விற்பனை செய்யும் நடைமுறை வழக்கத்திலுண்டு. இதன் போது S.34(1), S35 ஆகியவற்றில் எப்பிரிவு மேலோங்கும் என குழப்பம் காணப்படுகின்றது.
சொத்துவம், ஊறு கைமாற்றப்படல் தொடர்பான பிரச்சினைகைளுக்கான தீர்வுகள்
இங்கிலாந்த சட்டத்தில் பல சிக்கல்கள் திருத்தங்கள் மூலம் தீர்க்கப்பட்டன. உஸ்மான் எதிர் றகீம் வழக்கில் பொருள் விற்றபனைக் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 58(2) ஆனது அக்காலத்தில் இருந்த இங்கிலாந்து சட்டமே இலங்கைப்கு பொருந்தும் எனவும் பின்னர் உள்வாங்கப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்படைத்தாகாது என கூறப்பட்டது. எனவே இலங்கைசட்ட்டத்திலம் திருத்தம் மேற.கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக அமையும்.;
இந்த சிக்கலான நிலையை தீர்க்க இங்கிலாந்து புதிய சட்டத்தில் 1995ல் மேற்கொண்ட திருத்தம் மூலம் S.20A, S20B பிரிவுகளில் குறித்தொதுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்படாத பொருள் ஒப்பந்தத்pற்கான தேவைப்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. எனவே; இலங்கைச்சட்டத்தில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.
சர்வதேச பொருட்கள் விற்பனை ஒப்பந்த சமவாயத்தின் 66 தொடக்கம் 70 வரையான பிரிவுகள் மூலம் ஒழுங்குபடுத்தகப்பட்டுள்ளது. பிரிவு 66 ல் ஊறு கைமாற்றபப்ட்டதும் விற்றனையாளரின் தவறால் ஏற்பட்ட இழப்பபுக்களை தவிர ஏனைய சேதங்களுக்கே பொறுப்பாக்கப்படலாம். பிரிவுகள் 67- 69 வரை சர்வதேச வர்த்தகத்தில் ஊறு கைமாற்றபப்டும் குறிப்பான நிகழவுகள் தொடர்பில் விபரிக்கின்றது. சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரிச்சினைகள் சர்வதேச பொருட்கள் விற்பனை ஒப்பந்த சமவாயத்தில், இங்கிலாந்தின் புதிய பொருள்விற்பனைச்சட்டத்தின் மூலமும் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த சமவாயத்தில் ஊறானது பொதுவாக பொருட்களின் உடைமையடன் சேர்த்திருக்கும் என பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரு;விற்பனைச் சட்டத்தில் உள்ள குறைபாடு களையப்பட்டுள்ளது. ஆனால் பொருள்விற்பனைச்சட்டத்தில் சர்வதேச வர்தத்கம் தொடர்பான ஊறு, சொத்தவம் தனித்தனியாக வேறுபடுத்தப்பட்டுளள்து. இதனையொத்த ஏற்பாடுகளே இங்கிலாந்தின் 1979ம் ஆண்டின் சட்டத்திலம் காணப்படுனகின்றன. மேலும் INCOTERMS 2010 2010 ல் ஊறு கைமாற்றமானது விற்பனையாளரின் கையளிக்கம் கடப்பாட்டுடன் தொடர்புபடுதத்ப்பட்டுள்ளது. இதன்படி விற்பனையாளர் பொருளைக்கயைளிக்கம் வரை ஊறு கைமாற்றமடையாது. மேற்பn ஏற்பாடுகளைத்தழுவி இலங்கைச் சட்டத்திலும் திரத்தங்கள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்
சட்டத்தின் S.34(1), S35 பிரிவுகள்தொடர்பான முரண்பாடு இந்த சிக்கல் நிலை இங்கிலாந்து சட்டத்தின் S.35(6) பிரிவு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. இதன்படி விநியோகிக்கப்பட்ட பொருட்களை வெறுமனே விற்பனை செய்தல் ஏற்பாக கருதப்படாது என கூறப்பட்டுள்ளது. மேலும் 1967ம் ஆண்டின் இங்கிலாந்து பிறழ்பகர்வு சட்டத்தின் பிரிவு 4(2) மூலம் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பஜலான திருத்தமம் இலங்கைச் சட்டத்திற்க அவசியமானது.
எனவே நவீன காலத்திற்கேற்ப விற்பனை தொடர்பான சகல அம்சங்களும் பொருள்விற்பனைச் சட்டத்தில் உள்ளடக்குவதே பொருத்தமான தீர்வாக அமையும். பொருட்கள் விற்பனை தொடர்பான சர்வதேச சமவாயத்தில் இலங்கை இன்னமும் கையொப்பமிடவில்லை. மேற்படி சமவாயத்தை ஏற்பதன் மூலம் சர்வதேச ரீதியில் இடம்பெறும் பொருள் விற்பனை தொடர்பில் தரப்பினர் பாதுகாப்பை பெறமுடியும். அத்துடன் இங்கிலாந்தின் 1979ம் ஆண்டின் பொருள் விற்பனைச்சட்டம், இங்கிலாந்தின் 2015ன் நுகர்வோர்பாதுகாப்புச்சட்டத்தை தழுவி திருத்தங்கள் மேற்கொள்ளபப்டுவது தவிர்கக முடியாத தேவையாகும்.