பொருள் விற்பனை சட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் இங்கிலாந்து சட்டங்களுக்கிடையிலான ஒப்பீடு
ஒரு நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி சிறப்பாக அமைவதற்கு அதன் வர்த்தக போக்குகள் கையாளப்படும் முறைமையும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் வணிக சட்டங்களும் காலத்திற்கேற்றாற்போல் புதுப்பிக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.
இலங்கையில் பொருட்கள் விற்பனை தொடர்பில் உருவாக்கப்பட்ட 1896ம் ஆண்டின் 11ம் இலக்க பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டம்(SGO-LK), 1893ல் உருவாக்கப்பட்ட இங்கிலாந்தின் பொருள் விற்பனைச் சட்டத்தை ஒத்தது. பின்னர் இங்கிலாந்தின் சட்டம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக புதிய சட்டமொன்று 1979ல்;(SGA-UK)உருவாக்கப்பட்டது. அச்சட்டமும் பல திருத்தங்கள் மூலம் விரிவாக்கப்பட்டது. எனினும் நவீன வர்த்தக மாற்றங்களுக்கமைவாக இலங்கையின் SGO-LK ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
கட்டுறுத்து, நிபந்தனை தொடர்பில் SGO-LK மற்றும் திருத்தப்பட்டவாறான SGA-UK க்குமிடையிலான ஒப்பீடு
கட்டுறுத்து, நிபந்தனை தொடர்பாக SGO-LK ன் பிரிவுகள் 11-16, SGA-UK ன் பிரிவுகள் 9-15 ஆகியவற்றில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு சட்டத்திலும் நிபந்தனை தொடர்பில் வரைவிலக்கனம் எதுவும் கூறப்படவில்லை. எனினும் SGO-LK.59(1) மற்றும் SGA-UK.61(1) ஆகியன கட்டுறுத்து தொடர்பில் “பொருள் விற்பனை ஒப்பந்தமொன்றில் அதன் பிரதான நோக்கத்திற்கு காப்பாகவுள்ள உடன்படிக்கை கட்டுறுத்து எனவும் இதன் மீறலானது அவ்வொப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கான சர்ந்தப்பத்தை வழங்காமல், ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கும் உரிமையை வழங்கும்” என வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.
SGO-LK ல் உட்கிடையான நிபந்தனைகள், கட்டுறுத்துக்கள் என்ற சொற்களுக்கு பதிலாக SGA-UK (1995 திருத்தம்) ல் உட்கிடையான வாசகம் என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். இது பரந்தளவிலான நீதிமுறை பொருள்கோடலுக்கு உதவும்.
- SGO-LK S.11 மற்றும் SGA-UK S.10
ஒப்பந்தத்தில் பணம் செழுத்தும் காலப்பகுதி தொடர்பில் வாசகங்கள் காணப்படாதவிடத்து அது ஒப்பந்தத்த்pன் அவசியமான பகுதியாக அமையாது என இரு சட்ட ஏற்பாடுகளும் ஒரேமாதிரியாக வெளிப்படுத்துகின்றன. - SGO-LK S.12 மற்றும் SGA-UK S.11
இப்பிரிவுகள், எப்பொழுது ஒரு நிபந்தனையானது கட்டுறுத்தாக கணிக்கப்;படும் என்பதை கூறுகின்றது. இவை இருசட்டத்திலும் ஒன்றையொன்று ஒத்ததாகவே அமைகின்றது.
ஒப்பந்தமொன்றின் நிபந்தனை மீறலுக்காக அதனை முடிவுறுத்தாமல் பதிலீடாக கட்டுறுத்து மீறலாக கொள்வனவாளர் தெரிவு செய்யலாம்[SGO-LK S.12(1), SGA-UK S.11(2)]. ஒப்பந்தமொன்றில் நிபந்தனை மீறலானது அவ்வொப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதுடன்; கட்டுறுத்து மீறலானது இழப்பீட்டு கோரிக்கைக்கு மட்டுமே சர்ந்தப்பம் வழங்கும்[SGO-LK S.12(2), SGA-UK S.11(3)].
மேலும் பின்வரும் சூழ்நிலைகளில் இடம்பெற்ற நிபந்தனை மீறல் கட்டாயமாக கட்டுறுத்துமீறலாக கணிக்கப்படும[SGO-LK S.12(3), SGA-UK S.11(4)];.
• அவ்விற்பனை ஒப்பந்தம் பிரிக்கப்படமுடியாதாக இருக்கின்ற போது கொள்வனவாளர் பொருட்களைஃ பொருட்களின் ஒருபகுதியை ஏற்றுக்கொள்ளல்
• ஒப்பந்தமானது குறித்தொதுக்கப்பட்ட(Specific) பொருட்களாக அமையும் போது அப்பொருட்கள் கைமாற்றப்பட்டிருத்தல்.
இயலாந்தன்மைஃ வேறு காரணங்களால் மேற்குறித்த கட்டுறுத்துஃ நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதபோது இப்பிரிவுகள் செயற்படாது[SGO-LK S.12(4), SGA-UK S.11]. - SGO-LK S.13 மற்றும் SGA-UK S.12
இந்த ஏற்பாடுகள் பொருளின் உரித்து பற்றிய உட்கிடையான வாசகங்கள் பற்றியதாகும். இலங்கை, இங்கிலாந்து பொருள் விற்பனை சட்ட ஏற்பாடுகள் ஒத்ததாகவே காணப்படுகின்றது. எனினும் SGA-UK ல் விரிவான சொல்லமைப்புக்களுடன் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
SGO-LK S.13 ன் படி சூழ்நிலைகளுக்கமைவாக வேறுபட்ட நோக்கத்தை நிரூபித்தாலன்றி, விற்பவர் இப்பொருளை விற்பதற்கான உரிமையை கொண்டிருக்கவேண்டும்[SGO-LK S.13(a), SGA-UK S.12(1)];. பொருளை வாங்குபவர் அப்பொருளின் இடையூறற்ற உடைமையை அனுபவிக்கலாம[SGO-LK S.13(b), SGA-UK S.12(2)(a)];, பொருள் வாங்கும் போது முன்னர் வெளிப்படுத்தப்படாவிடின் பொருள் தொடர்பில் 3ம் நபர்சார்பில் எவ்வித
கட்டுப்பாடும் இல்லை[SGO-LK S.13(c), SGA-UK S.12(2)(b)] ஆகிய உட்கிடையான நிபந்தனைஃ கட்டுறுத்துக்கள் உள்ளதாக கருதப்படும்.
SGA-UK ல் விற்பனையாளர் தன்னிடமுள்ளஃ 3ம் நபரிடமுள்ள உரித்து கைமாற்றுதல் தொடர்பான நோக்கம் காணப்படுமிடத்து தோன்றும் உட்கிடையான வாசகங்கள் பற்றி மேலதிகமாக விளக்கப்பட்டுள்ளது. - SGO-LK S.14 மற்றும் SGA-UK S.13 – இந்த ஏற்பாடுகள் விவரணத்துடனான விற்பனை பற்றிய உட்கிடையான வாசகங்கள் பற்றியதாகும். இங்கும் இரு சட்டங்களும் ஒப்பீட்டளவில் ஒத்த ஏற்பாடுகளையே உள்ளடக்கியது. விவரணத்துடனான பொருள் விற்பனையில் அது விவரணத்தடன் ஒத்ததாக இருக்க வேண்டும். அத்துடன் மாதிரி காட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போது கூட விவரணத்துடன் ஒத்திருக்கவேண்டும[SGO-LK S.14, SGA-UK S.13(1), S.13(2), S.13(3)];.
SGA-LK S.13(3) ல் விற்பனை, வாடகை போன்ற விடயங்களில் பிரயோகமாகும். SGO-LK.14 ல் வாடகை தொடர்பில் ஏற்பாடுகள் இல்லை. - SGO-LK S.15 மற்றும் SGA-UK S.14
இந்த ஏற்பாடுகள் பொருட்களின் தரம் தொடர்பான உட்கிடையான விடயங்களை உள்ளடக்கியது. இரண்டு சட்டங்களிலும் சில சூழ்நிலைகளைத்தவிர, பொருள்விற்பனை ஒப்பந்தத்தின் தரம் தொடர்பில் உட்கிடையான கட்டுறுத்துக்கள்ஃ நிபந்தனைகள்ஃ வாசகங்கள் ;(இங்கிலாந்து) இல்லையென்பது பொதுவிதியாகும். இவை தொடர்பான விதிவிலக்குகளும் எடுத்து கூறப்பட்டுள்ளன.
அதில் SGO-LK S.15(2) ல் விற்பனைத்தரம்(Mercantile Quality) என்ற சொல் SGA-UK S.14(2) ல் திருப்தியானதரம்(Satisfactory Quality) என்பதாக திருத்தப்பட்டுள்ளது. இவ்வேறுபாடு சட்டங்களை பொருள்கோடல் செய்வதில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் ஆராயப்பட்டுள்ளது. - SGO-LK S.16 மற்றும் SGO-UK S.15
ஒப்பந்த்த்தில் உட்கிடையாகவோஃ வெளிக்கிடையாகவோ மாதிரி மூலமான விற்பனை எனும் வாசகம் உள்ள போது மாதிரி பொருள் மூலமான பொருள் விற்பனையாக அமையும்[SGO-LK S.16(1), SGA-UK S.15(1)]. மேலும் இத்தகைய விற்பனையில் மொத்தப்பொருட்களும் மாதிரியுடன் ஒத்திருக்க வேண்டும், வாங்குபவர் ஒப்பிட்டு பார்ப்பதற்கு நியாயமான காலம் வழங்கப்பட்டிருக்க வேண்டும், நியாயமான சோதனையின் போது வெளிப்படுத்தப்படாத குறைபாடுகளும் விற்பனை தரத்தை இல்லாதாக்கும் ஆகிய உட்கிடையான நிபந்தனைகள் காணப்படும் என இலங்கைக் சட்டம் கூறுகின்றது[SGO-LK S.16(2)].
ஆனால் இங்கிலாந்து சட்டத்தில் “வாங்குபவர் ஒப்பிட்டு பார்ப்பதற்கு நியாயமான காலம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்பது உட்கிடையான வாசகமாக ஏற்கப்படவில்லை.(1995 திருத்தம்). மேலும் இங்கும் விற்பனைத்தரம் என்ற சொல்லுக்கு பதிலாக திருப்தி தரம் என பதிலீடு செய்யப்பட்டுள்ளது[SGA-UK S.15(2)]. அத்துடன் Non Consumer தொடர்பான நிபந்தனை மீறலுக்கான பரிகாரங்கள் பற்றியும் மேலதிகமாக கூறப்பட்டுள்ளது[SGA-UK S.15A].ம்.
நவீன சூழ்நிலைகளுக்கு அமைவான வர்த்தக நடவடிக்கைகளை கையாள உதவும் சட்ட ஏற்பாடுகள் பற்றிய மதிப்ப்பீடு
SGO-LK S.15 ஆனது பொருட்களின் தரம், பொருத்தப்பாடு தொடர்பில் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்படுபவை தவிர்ந்த வேறு உட்கிடையான நிபந்தனைகள் எதுவும் இல்லை எனகூறும். இதன் விதிவிலக்காக S15(1) ல் கொள்வனவாளர் என்ன தேவைக்கு அப்பொருளை வாங்குகின்றார் என வெளிப்படையாகஃஉட்கிடையாக தெரிவித்து விற்பவரின் திறமையில் தங்கி நிற்பதாக காட்டப்படும் போது அப்பொருளானது வாங்கப்படும் நோக்கத்திற்கு நியாயமான அளவு பொருத்தமானதாக இருக்கவேண்டும் என உட்கிடையான நிபந்தனை உள்ளது.
இங்கு பொதுவான விதிக்;கு S.15(2) ல் மற்றமொரு விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது. விவரணத்துடனான பொருள் விற்பனையின் போது அப்பொருளை பரிசோதணை செய்யாமல் விவரணத்தில் தங்கி கொள்வனவு செய்யப்படின் அப்பொருட்கள் விற்பனைத்தரம்(Merchantable Quality) உடையதாக உட்கிடையான நிபந்தனையுள்ளது.
Bristol Tramways vs Fiat Motors ltd(1910) வழக்கில் விற்பனைத்தரம் எனும் சொல், சில்லறை வியாபாரி மொத்தவிற்பனையாளரிடம் கொள்வனவு செய்யும் சர்ந்தப்பங்கள், இயற்கை பொருட்களின் விற்பனை தொடர்பில் அதிகளவில் பொருந்தும் எனவும் கூறப்பட்டது. மேலும் பொருட்களின் தொழிற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாத சிறுசேதங்கள் காணப்பட்டாலும் அவை விற்பனைத்தரமுடையதாகவே கருதப்படல் ஒரு முக்கிய குறைபாடாகும். எனினும் விற்பனைத்தரம் என்பதற்கு சட்டத்தில் வரைவிலக்கணம் கூறப்படவில்லை. அத்தடன் விற்பனைத்தரம் எவ்வாறு அளவிடப்படும் என்பது தொடர்பான வழிகாட்;டல்கள் எதுவும் சட்டத்தில் காணப்படவில்லை. Kearly & Tonge vs Peer (1922) வழக்கில் விற்பனைத்தரத்தை நில அளவையாளரொருவரின் சான்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தமை அகவய அணுகுமுறையாக அமைவதால் நியாயமற்ற முடிவுகளை தரக்கூடும் எனப்பட்டது.
இந்த சிக்கலான நிலையை தீர்க்க SGA-UK சட்டத்தில் 1995ல் மேற்கொண்ட திருத்தம் மூலம் ளு.14(2) ல் விற்பனைத்தரம் என்ற சொற்களுக்கு பதிலாக திருப்தியானதரம்(Satisfactory Quality) என பதிலீடு செய்யப்பட்டது. மேலும் S.14(2A) ல் திருப்தியானதரம் என்பதற்கான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை மதிப்பிடுவதற்கு புறவய பரீட்சையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு நியாயமான மனிதனொருவன், பொருட்களின் விவரணம், விலை, ஏனைய பொருத்தமான சூழ்நிலைகளின் ;அடிப்படையில் திருப்தியடைவானாயின் அது திருப்தியானதரம் உடையதாகும். S.14(2B) ல் பொருட்களின் தரம் என்பது அதன் நிலையை(State) உள்ளடக்குவதுடன் பொருட்கள் வாங்கப்பட்டதன் நோக்கங்களுடன் பொருந்தும் தன்மை, தோற்றம்(Appearance), சிறு சேதங்கள் இல்லாமலிருத்தல், பாதுகாப்பு(Safety), பாவனைக்காலம்(Durability) போன்ற அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என கூறியது. விற்பனைத்தரம் நடைமுறையிலிருந்த காலத்தில் “வாங்கப்பட்ட குறித்த நோக்கத்திற்கு நியாயமான அளவுக்கு பொருந்தகூடிய தன்மை”16 என்ற அர்த்தத்தில் பொருள்கோடல் செய்யப்பட்டபோதும், திருப்தியானதரம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டபின் குறித்த பொருட்களின் பாவனைக்குரிய சகல சாத்தியமான நோக்கங்களும் கவனத்திலெடுக்கப்பட்டன.
மேலும் SGO-LK S.16(2)(c) இலும் மாதிரி மூலமான விற்பனை தொடர்பில் விற்பனைத்தரம் எனும் சொல் இன்னமும் காணப்படுகின்றது. ஆனால் SGA-UK S.15(2)(c) ல் திருப்தியானதரம் என பதீலீடு செய்யப்பட்டுள்ளமை முன்னேற்றகரமானது.
SGO-LK S.14 ; விவரணத்துடனான பொருள் விற்பனையில் அது விவரணத்துடன் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருப்பதால் சிறியளவில் விவரணத்துடன் பொருந்தாவிட்டால் கூட ஒப்பந்தத்தை முடிவுறுத்தமுடியும். Re Moore & Landauer (1921)வழக்கில; தகரத்திலடைக்கப்பட்ட பழங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட எண்ணிக்கை சரியாக இருந்த போதும், விவரணத்தில் குறிப்பிட்டபடி பொதிசெய்யாமையால் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.
இலங்கை சட்டத்தின் S.34(1), S35 க்கிடையில் முரண்பாடு காணப்படுகின்றது. அதாவது SGO-LK S.34(1) ல் பொருளை பரிசோதிப்பதற்கு போதுமான சர்ந்தப்பம் வழங்கப்படாத நிலையில், இப்பொருட்களை பரிசோதனை செய்யாமல் வாங்கும் போது, ஏற்கப்பட்டதாக கருதப்படாது. எனினும் S.35 ல் வாங்கப்பட்ட பொருளொன்றை விற்பனையாளரின் சொத்துவத்திற்கு முரணாக ஏதும் நடவடிக்கைகளை செய்யும் போது ஏற்பாக கருதப்படலாம் என்கிறது. இந்நிலையில் பரிசோதனை செய்யாமல் பொருளொன்றை வாங்கியபின் அதணை துணை கொள்வனவாளரொருவருக்கு மீள விற்பனை செய்யும் நடைமுறை வழக்கத்திலுண்டு. இதன் போது ளS.34(1), S.35 ஆகியவற்றில் எப்பிரிவு மேலோங்கும் என குழப்பம் காணப்படுகின்றது. இந்த சிக்கல் நிலை SGA-UK S.35(6) ல் தீர்க்கப்பட்டுள்ளது. இதன்படி விநியோகிக்கப்பட்ட பொருட்களை வெறுமனே விற்பனை செய்தல் ஏற்பாக கருதப்படாது என கூறப்பட்டுள்ளது.
SGO-LK S.17 ல் உறுதிப்படுத்தப்படாத(Unascertained) பொருட்களின் விற்பனை ஒப்பந்தத்தில்; அப்பொருள் உறுதிப்படுத்தப்படும் வரை அதன் சொத்துவம் கைமாற்றமடையாது எனக்கூறப்பட்டுள்ளது. எனினும் உறுதிப்படுத்தப்படாத பொருட்கள் பற்றிய வரைவிலக்கணம் சட்டத்தில் காணப்படவில்லை.
SGA-UK S.20A,S20B குறித்தொதுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்படாத பொருள் ஒப்பந்தத்pற்கான தேவைப்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட போதும் தற்காலத்திற்கேற்ற முழுமையான தீர்வாக அமையவில்லை.
மென்பொருட்கள் உட்பட டிஜிட்டல் உள்ளடக்கங்களும் மேற்படி இருசட்டங்களிலும் உள்ளடக்கப்படவில்லை. ஆனால் இங்கிலாந்தில் 2015ல் உருவாக்கப்ட்ட நுகர்வோர் உரிமைகள் சட்டம,; நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் டிஜிட்டல் உள்ளடக்கம் பற்றிய ஏற்பாடுகள் உட்பட விரிவான ஏற்பாடுகளை உள்ளடக்கியது. இங்கிலாந்தின் பொருள் விற்பனைச்சட்டம் தற்போது வியாபாரம் -வியாபாரம் தொடர்பாகவே ஆளப்படுகின்றது. நுகர்வோர் – வியாபாரம் தொடர்பில் 2015 சட்டத்தாலேயே ஆளப்படுவர்.
இலங்கையில்; கடனட்டை, மின்வர்த்தகம் தொடர்பான வியாபாரங்களுக்கும் இலத்திரனியல் பரிமாற்ற சட்டத்திலேயே(டLK) தங்கியிருக்கவேண்டியுள்ளது. எனவே நவீன காலத்திற்கேற்ப விற்பனை தொடர்பான சகல அம்சங்களும் பொருள்விற்பனைச் சட்டத்தில் உள்ளடக்குவதே பொருத்தமான தீர்வாக அமையும். பொருட்கள் விற்பனை தொடர்பான சர்வதேச சமவாயத்தில் இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இன்னமும் கையொப்பமிடவில்லை. மேற்படி சமவாயத்தை ஏற்பதன் மூலம் சர்வதேச ரீதியில் இடம்பெறும் பொருள் விற்பனை தொடர்பில் தரப்பினர் பாதுகாப்பை பெறமுடியும்