கைத்தொழில் சட்டம்: இலங்கையின் கைத்தொழில் நடுத்தீரப்பு பொறிமுறையின் பலம் மற்றும் பலவீனங்கள்
அண்மைக்காலங்களில் கைத்தொழில் பிணக்குகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடுத்திர்ப்பு முறையை விரும்புவது அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள் மூலம் தீரவினை பெறுவதைவிட நடுத்தீரப்பு பொறிமுறை மூலம் அதிகளவு நன்மைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் கிழே
ஆராயப்படுகின்றது.
நடுத்தீர்ப்பு பொறிமுறையானது நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை விட விரைவானதாகும். அத்துடன் செலவு குறைந்த முறையாகவும் அறியப்படூகின்றது. இது நெகிழ்வுத்தன்மையுடைய முறையாகும். மேலும் பிணக்கு தொடர்பான விடயங்கள் அதிகளவு தொழில்நுட்ப சிக்கல் வாய்ந்நதாக இருப்பின் அத்துறையில்:
விசேட அனுபவம்பெற்றவர்களை நியமிப்பது சிறப்பம்சமாகும்.
நடுத்தீர்ப்பு வழக்கு நடவடிக்கைகள் பொதுவாக பகிரங்கமாக நடைபெறுவதில்லை. இறுதி தீரத்தளிப்பு தொடர்பான விபரங்கள் மட்டுமே வர்த்தமானியில் வெளியிடப்படும். நடுத்தீரப்பு பொறிமுறையில் தரப்பினர் வழக்கு நடவடிக்கைகளில் தமக்குரிய மொழியை தெரிவுசெய்யலாம். ஆனால் நீதிமன்றங்களில் அரசகரும மொழியிலேயே வழக்குகள் இடம்பெறலாம். பொதுவாக நநடுத்தீரப்பு தீரத்தளிப்பின் பின்னராக மேன்முறையீட்டுக்கான சாத்தியங்கள் மட்டூப்படுத்தப்பட்டூள்ளது. இதன் மூலம் பிணக்கு தொடர்பில் இறுதிமுடிவை எட்டும் காலம் குறைவடைதல் ஒருவகையில் சாதகமான அம்சமாகும்.
நடுத்தீரப்பு வழக்கு நடவடிக்கைகளில் அமைச்சர் அல்லது ஆணையாளர் தலையிடமுடியாமை தவிரக்கமுடியாத சந்தர்ப்பங்களைத்தவிர நடுத்தீர்ப்பாளரை மாற்றமுடியாமை போன்ற காரணிகள் தகாத செல்வாக்கு பிரயோகத்தை தடுக்க உதவும். அத்துடன் நடுத்தீரப்பாளருக்கு முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரத்தை வழங்கும்.
நடுத்தீர்ப்பாளர் தொழில் ஒப்பந்தத்திற்கு கட்டூப்படாமலும் தீரத்தளிப்பை வழங்கலாம். அவை உட்கிடையான வாசகங்களாக கருதப்படுவதால் தொழில் ஒப்பந்தங்கள் நியாயமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றப்படும். Brown and Company v. Minister of Labour (2011) 2 BLR 485 வழக்கில் விளக்கம் இடம்பெறும் போதான தரப்பினரின் உரிமை மற்றும் கடமைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் குறித்த தரப்பினருக்கு உரித்தான உரிமைகள் மற்றும் கடமைகளையும் வெளிப்படூத்துவதற்கான உரிமையும் நடுத்தீர்ப்பாளருக்கு உள்ளது என கூறப்பட்டது.
சட்டத்தின் பிரிவு 36(1) படி நடுத்தீரப்பாளர் எந்தவொரு நபரிடமிருந்தும் விளக்கம் கோரமுடியும் என குறிப்பிடுகின்றது. அத்துடன் நடுத்தீரப்பாளர் நீதியியல் ரீதியில் தொழிற்பட வேண்டும் என இலங்கை நீதிமன்றங்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளன. மேற்படி அம்சங்கள் நீதிமன்றத்தின் செயன்முறையை ஒத்ததாக இருப்பதால் சிறந்த தீரத்தளிப்பை வழங்குவதில் பங்களிப்பு செய்யும். All Ceylon Commercial and Industrial Workers Union v. Nesle Lanka Ltd (1999) 1 SLR 343 வழக்கில் தரப்பினரின் உரிமையை பாதிக்கும் விடயங்கள் தொடர்பான பிணக்கு என்பதால் நீதியியல் அடிப்படையில் தொழிற்படுவது அவசியமானது என கூறப்பட்டது. இது நிர்வாகச் சட்டத்தில் அண்மையில் விருத்தியடைந்த முக்கிய கோட்பாடாகும்.
வினைத்திறனான பிணக்குகளை தீர்க்கும் பொறிமுறைகள் இல்லாதவிடத்து கைத்தொழில் ரீதியான பிணக்குகள் மேலும் சிக்கல்வாய்ந்ததாகவே மாறக்கூடும். அந்த வகையில் நடுத்தீரப்பு பொறிமுறையிலும் சில பாதகமான அம்சங்கள் இனம் காணப்பட்டுள்ளது.
நடுத்தீர்ப்பு பொறிமுறை அதிகளவில் சிக்கல்கள் வாய்ந்ததாக காணப்படுகின்றன. மேலும் வசதியான வலுவான தரப்பினர் சார்பில் தோன்றும் சட்ட நிறுவனங்களின் அழுத்தம் அதிகளவில் காணப்படும். கட்டாய நடுத்தீர்ப்பில் தரப்பினர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்புக்கள் மட்டூப்படுத்தப்படுவதுடன் தீரத்தளிப்பு பிணிக்கும் தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் நடத்தீர்ப்பாளருக்கு
தரப்பினர் கட்டணம் செழுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம்.
தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரிவு 16 ன் காப்பு வாசகத்தில் நடுத்தீர்ப்பாளர் குறித்த கட்டளைக்கு முன்னராக தோன்றிய பிணக்கு தொடர்பான விடயங்களில் தீரமானமெடூக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இதன் படி நடுத்தீர்ப்பு பொறிமுறையில் நடுத்தீரப்பாளருக்கு மட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது. Shell Company of Ceylon Ltd v. Perera (1967) 70 NLR 108 வழக்கில்”வழக்கில் நடுத்தீர்ப்பாளருக்கு ஆற்றுப்படுத்தியபின்னர் வேலை முடிவுறுத்தப்பட்டமையால் ஏற்பட்ட நட்டஈடு தொடர்பில் தீரமானிக்கும்
அதிகாரம் நடுத்தீரப்பாளருக்கு காணப்படவில்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
சட்டத்தில் “கைத்தொழில் பிணக்கு’” என்ற வரைவிலக்கணத்திற்கு பொருத்தமான விடயங்களில் மட்டுமே நடுத்தீரப்புக்கு எடுத்து கொள்ளப்படும். சிறியளவில் வரைவிலக்கனத்திற்குள் பொருந்தாத விடயங்களில் வேறு நியதிச்சட்டங்களையே நாடவேண்டியிருக்கும்.
Wimalasena v. Navaratne (1978) 2 SLR 10 வழக்கில் நியாயசபையில் நிலுவையிலுள்ள பிணக்கு தொடர்பில் நடுத்தீரப்புக்கு ஆற்றுப்படுத்த முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீரப்பு பின்னர் வந்த Upali Newspapers ltd v. Eksath Kamkaru Samithiya (2001) 1 SLR 105 வழக்கில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் படி தொழில் நியாயசபையில் நிலுவையிலுள்ள வழக்கை நடுத்தீரப்புக்கு ஆஹ்றுப்படுத்தமுடியாது.
தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரிவு 17(1) படி நடுத்தீரப்பாளர் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சான்றுகளை மட்டூமே கேட்கும் அதிகாரம் காணப்படுகின்றது. எனினும் பிரிவு 24 படி கைத்தொழில் நீதிமன்றங்கள் தமக்கு தேவையான அனைத்து சான்றுகளையும் கோரமுடியும். இதனால் நடுத்தீர்ப்பில்
முடிவுகளை எடுப்பதில் போதுமான ஆதாரங்கள் இல்லாது போகலாம்.
பொதுவாக நநடுத்தீர்ப்பு தீரத்தளிப்பின் பின்னராக மேன்முறையீட்டுக்கான சாத்தியங்கள் மட்டூப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிணக்கு தொடர்பில் தவறான தீரத்தளிப்பு வழங்கப்பட்டால் அதனை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாகும்.
மேற்படி விடயங்களை ஆழாயும் போது இலங்கையில் நடுத்தீரப்பு பொறிமுறை அதிகளவு சாதகங்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. ஏற்கனவே கூறப்பட்டதன் படி தொழில் பிணக்குகள் சட்டத்தின் மூலம் சிறப்பான பயனையடைவதற்கு சட்ட ஏற்பாடுகளை ஒன்றிணைத்து பயன்படுத்துவதன் மூலம் நடுத்தீர்ப்பு பொறிமுறையை பயனுறுதிவாய்ந்ததாக மாற்றமுடியும். இலங்கை நீதிமன்றங்களின்
தீர்ப்புக்கள் மூலம் கைத்தொழில் நடுத்தீர்ப்பு பொறிமுறை சிறப்பானதாக மாற்றப்பட்டள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்.