கைத்தொழில் பிணக்கொன்றை நடுத்தீர்ப்பாளருக்கு ஆற்றுப்படுத்தல் தொடர்பில் அமைச்சருக்குள்ள நியாயாதிக்கம்
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் கைத்தொழில் சார் அமைப்புக்களின் வினைத்திறனான.தொழிற்பாடு அவசியமாகும். அந்த வகையில் இலங்கையில் கைத்தொழில் பிணக்குகள் சட்டமானது தொழில்தருனர் மற்றும் தொழிலாளிகளுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம்.
தரப்பினரிடையே சுமூகமான உறவுகளை பேணிப்பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த சட்டமானது பிணக்குகளை இணக்கத்தீர்வு, நடுத்தீரப்பு, தொழில்நியாயசபை, கைத்தொழில் நீதிமன்றங்கள் போன்றவற்றினூடாக தீர்ப்பதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கியது.
நடுத்தீர்ப்பானது நீதிமன்றில் வழக்கிடும் நடவடிக்கைகளை விட அதிக நன்மைகளை உள்ளடக்கியது.(சென், 2007). நடுத்தீர்ப்பானது தன்னிச்சையான மற்றும் கட்டாய நடுத்தீரப்பு என 2 வகைப்படும். இங்கு முதலாவது வகைப்பாட்டில் தரப்பினரின் சம்மதத்துடன் நடுத்தீர்ப்பாளர் தொழில் ஆணையாளரால்.
நியமிக்கப்படுவர். கட்டாய நநடுத்தீர்ப்பில் அமைச்சர் நடுத்தீரப்பாளருக்கு சிறிய கைத்தொழில் பிணக்கொன்றை எழுத்திலான கட்டளை மூலம் ஆற்றுப்படுத்தல் செய்யலாம்.இந்த வகைப்பாட்டில் தரப்பினரின் சம்மதம் வழங்கப்படாத நிலையில் ஏற்படும். மேலும் தொழில் ஆணையாளரால் ஏனைய பொறிமுறைகளை பயன்படுத்தி தீர்க்க முடியாத பிணக்குகளும் அமைச்சரினால் கட்டாய நடுத்தீர்ப்புக்கு,
அனுப்பப்படலாம் என சில்வா குறிப்பிட்டுள்ளார். Chas P. Hayley and Co Ltd v. Commercial and Industrial Workers, (1995) 2 SLR 42 வழக்கில் கைத்தொழில் பிணக்கை சமாதானமாக தீர்ப்பதற்கு அமைச்சருக்கு பரந்தளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டு.” பிணக்கு சிறியதா அல்லது பெரியதா என்பதை தீரமானிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு. காலம் தாழ்த்தப்பட்ட பிணக்காக இருப்பினும் அதனை அற்றுப்படுத்தவும் அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என Winfreeda Mills v. Thilakaratne (1984) SLLR 25 வழக்கில் குறிப்பிடப்பட்டது.
நடுத்தீர்ப்புக்கு அமைச்சர் பிணக்கொன்றை ஆற்றுப்படுத்தும் செயலானது நிர்வாகரீதியானது. இங்கு அமைச்சர் பிரிவு 4(1) ன் கீழ் பிணக்கொன்றை நடுத்தீர்ப்புக்கு ஆற்றுப்படுத்தாமலிருத்தல் பற்றிய அதிகாரம் தொடர்பில் குழப்பமான நிலை காணப்பட்டது. இவ்வாறான நிலையில் சட்டத்தில் மீளாய்வு அல்லது மேன்முறையீடு பற்றி எத்தகைய ஏற்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் இது நிர்வாக செயல் என்பதால் பிணக்கினை ஆற்றப்படுத்தல்/ ஆற்றுப்படுத்தாமை தொடர்பில் அமைச்சரினால் அதிகார
துஸ்பிரயோகம் இடம்பெற்றிருந்தால் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) மீறலுக்காக, உறுப்புரை 126 படி உயர்நீதிமன்றத்தில் வழக்கிடலாம். அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உறுப்புரை 141 கீழ் உறுதிகேள் எழுத்தாணை மனு தாக்கல் செய்யலாம். மேலும் அதிகாரசபைகள் நம்பிக்கை அடிப்படையில் அதிகாரங்களை பிரயோகிப்பதால் அதன் மீறலுக்காக பொது நம்பிக்கை கோட்பாட்டின் அடிப்படையிலான மீறலுக்கும் வழக்கிடலாம்.
சட்டத்தின் பிரிவு 31ஆ(2)(ஆ) ல் தொழில் நியாயசபையில் நிலுவையிலிருக்கும் பிணக்கு தொடர்பில். அமைச்சர் பிரிவு 4(1) ன் அடிப்படையில் நடுத்தீர்ப்பாளருக்கு ஆற்றுப்படுத்தமுடியாது என கூறப்பட்டுள்ளது. எனினும் Wimalasena v. Navaratne (1978) 2 SLR 10 வழக்கில் அமைச்சருக்கு நியாயசபையில் நிலுவையிலுள்ள பிணக்கு தொடர்பில் ஆற்றுப்படுத்த அதிகாரமுண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கூறப்பட்டது. பின்னர் வந்த Upali Newspapers ltd v. Eksath Kamkaru Samithiya (2001) 1 SLR 105 வழக்கில் சட்டத்தில் உள்ளவாறே பொருள்கொடல் செய்யப்பட்டது. இதன் மூலம் சட்டத்திலுள்ள குழப்பநிலை தீர்க்கப்பட்டது.
பிரிவு 4(1) ன் கீழ் அற்றுப்படுத்தப்பட்ட பிணக்கொன்றை மீளப்பெற மற்றும் இரத்து செய்ய
அமைச்சருக்குள்ள அதிகாரம் தொடர்பில் ஆராயப்படுவது அவசியமாகும். Nadarajah Ltd v. Krishnadasan வழக்கில் இந்த அதிகாரம் மறுக்கப்பட்டது. ஆனால் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் அதாவது நியமிக்கப்பட்ட நடூத்தீரப்பாளர் மறுப்பு தெரிவித்தல், ஒய்வு பெறல், இறப்பு, செயற்படமுடியாத நிலை, நீண்டகால வெளிநாட்டுப்பயணம் போன்ற காரணங்களினடிப்படையில் இன்னொரு நடுத்தீரப்பாளருக்கு ஆற்றுப்படுத்தமுடியும் என தீர்ப்பில் நீதியரசர் சர்வானந்தா கூறினார்.மேலும் நடுத்தீரப்பாளரால் வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றுவதற்கான அதிகாரம் அமைச்சருக்கு. காணப்படவில்லை. பிணக்கினை ஆற்றுப்படுத்துதல் தொடர்பிலும் நடுத்தீரப்பாளரை தெரிவுசெய்தல். தொடர்பிலான தற்றுணிவு அதிகாரம் மட்டுமே காணப்படுகின்றது. அமைச்சருக்கு பிணக்கு உள்ளபோது,
மட்டுமே தலையிட அதிகாரமுண்டு. ஆனால் ஆணையாளருக்கு பிணக்கு உருவாககூடிய சாத்தியமுள்ள நிலையிலும் தலையிடமுடியும். மேற்படி சட்டத்தின் ஏற்பாடுகள் அமைச்சரால் பிணக்கு ஆற்றுப்படுத்தப்படல், நடுத்தீர்ப்ளரின்
நியாயாதிக்கத்தில் தலையிடல் போன்ற விடயங்களில் அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெறின் உயர்நிலை நீதிமன்றங்கள் தலையிட்டு கட்டுப்படுத்துவதால் நடுத்தீரப்பாளரின் தீர்மானம் தொடர்பிலான சுயாதீனத்தன்மை பேணப்படூகின்றது.