ஆண்மைக்குறைவை காரணம் காட்டி விவாகரத்து கோரலாமா?

ஆண்மைக்குறைவை காரணம் காட்டி விவாகரத்து கோரலாமா?

FacebookWhatsAppViberMessengerTelegramTwitterLinkedInPinterestGmailMessageCopy LinkEmailRed

ditPr1. இலங்கையில் விவாகம்,விவாகரத்து தொடர்பான சட்டம்

இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக விவாக,விவாகரத்து சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும்(General Marriage Ordinance) உண்டு.

ற்கனவே விவாகரத்து காரணியான சோரம் பற்றி ஆராய்ந்துள்ளோம்.

2. பொதுச்சட்டத்தில் விவாகரத்து கோருவதற்கான காரணங்கள்?

இலங்கையில் பொதுச்சட்டத்தால் ஆளப்படுபவர்கள் விவாகரத்து பெறவேண்டுமானால் மாவட்ட நீதிமன்றில் வழக்கிட்டே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே விவகாரத்தை பெறவிரும்பும் ஒருவர் பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது பலவற்றை கூறி மாவட்ட நீதிமன்றில் விவாகரத்தை கோர முடியும்.

1. சோரம் போதல்
2. வன்ம உறவறுத்தல்
3. மலட்டுத்தன்மை

3. 7 வருடங்கள் தொடர்ச்சியாக பிரிந்திருந்தால் விவாகரத்து கோரலாம் என்கிறார்களே…… உண்மையா?

இது மிகவும் தவறான நம்பிக்கையாகும். மேலே கூறிய 3 காரணங்களை நீதிமன்றம் திருப்திப்படும் படியாக நிரூபித்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும்.

4. மலட்டுத்தன்மை என்றால் என்ன?

பொதுத்திருமண சட்டத்தின் பிரிவு 19(2) ல் விவாகரத்துக்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக தீராத மலட்டுத்தன்மையை குறிப்பிடுகின்றது.

இது விவாகரத்துக்கான காரணமாக இருந்தபோதும், இந்த காரணத்தின் அடிப்படையில் திருமண வெற்றாக்கல் கட்டளை பெறவும் முடியும். விவாகரத்து மற்றும் விவாக வெற்றாக்கம் ஆகிய இரண்டும் வெவ்வேறு எண்ணக்கருக்கலாகும். வேறு பதிவில் இது பற்றி ஆராயப்படும்.

தீராத மலட்டுத்தன்மை என்பது “ஒருவர் திருமணமாக முன்னரே மலட்டுத்தன்மையுடையவராக இருந்து, திருமணத்தின்பின் மற்றவருடன் திருப்திகரமாக பாலியல் உறவு கொள்ளமுடியாத நிலையில் இருத்தலை குறிக்கும். இது ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தும்.

சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியாத நிலை/ சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த கூடியதாக இருப்பினும் குறித்த நபர் சத்திர சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கும் நிலை தீராத மலட்டு தன்மை எனப்படும்.

5. திருமணமாகிய பின் மலட்டு தன்மை ஏற்படும் நிலைமை

திருமணத்தின் பின் மலட்டு தன்மை ஏற்பட்டால் அதனை காரணம் காட்டி விவாகரத்து கோரமுடியாது.

6. ஒருவருடன் குழந்தை பெறமுடியவில்லை எனக்கூறி விவாகரத்து செய்யலாமா?

இருவரும் திருப்தியான பாலியல் உறவில் ஈடுபட்ட போதும் குழந்தை கிடைக்கவில்லை எனற காரணத்தை காட்டி விவாகரத்து கோரமுடியாது.

மலட்டு தன்மையை காரணம் காட்டி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் போது நிரூபிக்கவேண்டிய ஒரே விடயம், எதிராளி திருமணத்திற்கு முன்னரே மலட்டுத்தன்மையுடையவராக இருந்துள்ளார் என்பதாகும்.

6. பெர்னாண்டோ எதிர் பீரிஸ் வழக்கு

இவ்வழக்கில் கணவன் திருமணத்தின் போதே தீராத மலட்டுத்தன்மை உடையவர் எனவும், தன்னுடன் திருப்திகரமான பாலியல் உறவு கொள்ளவில்லையெனவும் மனைவி நிரூபித்தார்.

மேலும் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் மனைவி கன்னித்தன்மை உடையவர் எனவும் காணப்பட்டது. இதனடிப்படையில் அவர்களின் திருமணம் வெற்றானது என தீர்க்கப்பட்டது.

7. குணதிலக எதிர் மிலினோனா வழக்கு

இவ்வழக்கில் திருமணத்தின் போது தனது மனைவி தீராத மலட்டு தன்மை உடையவர் என கூறி வழக்கிட்டார். இங்கு மருத்துவ அறிக்கை மனைவி பாலியல் உறவுகொள்ள பயப்படுகிறார் என்றும் , பாலியல் உறவு அவருக்கு அருவருப்பை ஏற்படுத்துவதாகவும், இது ஒருவித மனத்தாக்கம் எனவும் கூறியது.

அத்துடன் அவள் கன்னித்தன்மையுடைவர் எனவும் காணப்பட்டதால் வழக்காளி சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

FacebookWhatsAppViberMessengerTelegramTwitterLinkedInPinterestGmailin

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US