விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டத்திலுள்ள ஏற்பாடுகள்

விவாகரத்து தொடர்பில் இலங்கை சட்டத்திலுள்ள ஏற்பாடுகள்

மனித வாழ்வுக்கு அடிப்படை குடும்பமாகும். பண்டைய காலத்தில் எல்லா சமூகங்களிலும் விசேடமாக கீழைத்தேசத்தில் இக்குடும்ப பண்பே நிலவியது. காலப்போக்கில் இடம்பெற்ற கலாச்சார,சமூகவளர்ச்சியால் இந்நிலைமை மாற்றம்பெற தொடங்கியது. மக்களும் நவீன வாழ்க்கைமுறைக்கேற்ப நகர தொடங்கிவிட்டனர்.

இதனால் நாடுகள் இத்தகைய சமூகத்துக்கு தேவையான சட்டங்களை இயற்றவேண்டியேற்பட்டது.

1. இலங்கையில் விவாகம்,விவாகரத்து தொடர்பான சட்டம்

இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக விவாக,விவாகரத்து சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும்(General Marriage Ordinance) உண்டு.

 

2. பொதுச்சட்டத்தில் விவாகரத்து கோருவதற்கான காரணங்கள்?

இலங்கையில் பொதுச்சட்டத்தால் ஆளப்படுபவர்கள் விவாகரத்து பெறவேண்டுமானால் மாவட்ட நீதிமன்றில் வழக்கிட்டே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே விவகாரத்தை பெறவிரும்பும் ஒருவர் பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது பலவற்றை கூறி மாவட்ட நீதிமன்றில் விவாகரத்தை கோர முடியும்.

1. சோரம் போதல்
2. வன்ம உறவறுத்தல்
3. ஆண்மையின்மை

 

3. 7 வருடங்கள் தொடர்ச்சியாக பிரிந்திருந்தால் விவாகரத்து கோரலாம் என்கிறார்களே…… உண்மையா?

இது மிகவும் தவறான நம்பிக்கையாகும். மேலே கூறிய 3 காரணங்களை நீதிமன்றம் திருப்திப்படும் படியாக நிரூபித்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும்.

சோரம் போதல் நிகழ்ந்தமை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அனால் குற்றவியல் வழக்கொன்றை நிரூபிக்க தேவையான அளவு நிரூபணம் தேவை இல்லாவிடடாலும் ஒருபடி குறைந்த அளவு நிரூபணம் போதுமானது என சில வழக்குகளில் கூறப்பட்டுள்ளது.

4. சோரம் என்றால் என்ன?

சோரம் என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கம் என்னவெனில் தம்பதியர்களின் ஒருவர் தனது துணைவர் அல்லது துணைவியை தவிர்ந்த பிறர் ஒருவருடன் தன சொந்த விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுதலாகும்.

சிலசமயத்தில் அன்பாலும் சிலசமயத்தில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையிலும் இது இடம் பெறலாம்.

5. திருமணமான ஒருவர் இன்னொரு பெண்ணையும் துணைவியாக வைத்திருக்க முடியுமா?

பல இடங்களில் விவாகம் செய்த ஒருவர் தனது மனைவியின் சகோதரியுடன் தொடர்புவைத்து குழந்தைகளும் கிடைத்துவிடுகின்றன. இங்கு சட்டப்படி பார்த்தால் சோரம் நடைபெறுவது புலனாகிறது. ஆனால் சோரத்தின் கீழ் இவ்வழக்கை தாக்கல் செய்தல் முழுக் குடும்ப மதிப்பும் பாதிக்கப்படும்.

இலங்கை சட்டத்தில் திருமணமான ஒருவர் இன்னொருபெண்ணுடனும் சேர்ந்திருக்க முடியும். இதற்கு எவ்வித தடையும் இல்லை. இங்கு முதல் மனைவி இதனை காரணமாக கூறி விவாகரத்து வழக்கு அல்லது தாபரிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம்.

இன்னொருத்தியுடன் சேர்ந்து வாழ்வது குற்றம் என கூறி வழக்கிடமுடியாது, அதாவது சோரம் போதல் இலங்கையில் தண்டணை சட்ட கோவையில் குற்றமாக கூறப்படவில்லை.

இந்திய சட்டத்தில் சோரம் போதல் இந்திய தண்டணை சட்ட கோவையின் பிரிவு 477இல் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 2018 இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பில் அந்த பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது எனக்கூறி நீக்கப்பட்டது.

 

6. சோரத்துக்கான ஆதாரங்களை நிரூபித்தலின் கடினத்தன்மை

விவாகரத்துக்கான காரணங்களை நிரூபிப்பது மிகக்கடினம். அதனை ஊகத்தின் மூலமே நிரூபிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் தனியாக ஒரு இடத்துக்குள் நுழைகிறார்கள் என்றால் அங்கு என்ன செய்கிறார்கள் என நாம் காணமுடியாது. சிலவற்றை ஊகிக்கலாம்.எனினும் ஊகம் பிழையாகவும் இருக்கலாம்.

7. பொது திருமண சட்டத்தின் தற்போதைய நிலை

விவாகரத்து சட்டம் இறுக்கமானது. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப இந்த சட்டம் திருத்த ப்படவேண்டும்.

விவாகரத்துகளின் எண்ணிக்கை மற்றும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பானது சோரம் போதலின் விளைவை காட்டுகின்றது.

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US
K. Yugawendra, Lawyer in Jaffna
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.