வர்த்தக சட்டம்: நுகர்வோர் பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் அபிவிருத்தி( Consumer Protection)
உரோமன் சட்டத்தில் அறிமுகமாகி ஆங்கிலச்சட்டம் வரை “வாங்குபவர் கவனமாயிரு” (Caveat Emptor Doctrine)என்ற கோட்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதன்படி கொள்வனவாளர் பொருளொன்றை வாங்கியபின் அதனுடன் தொடர்பான சேதங்களுக்கான இழப்பீடுகளை மீளப்பெறமுடியாமல் இருந்தது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு எண்ணக்கரு படிப்படியாக வளர்ச்சியடைந்து அவை தொடர்பான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அனேக பொருள் விற்பனை தொடர்பான நியதிச்சட்டங்களில் தரம், பொருத்தப்பாடு தொடர்பிலான குறைபாடுகள் உட்கிடையான நிபந்தனை மீறலாக கருதப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் பொருள் விற்பனை கட்டளைச்சட்டத்தின் பிரிவு 15,16 புதிய(1979) இங்கிலாந்து பொருள் விற்பனை கட்டளைச்சட்ட பிரிவு 14,15 இவற்றை பிரதிபலிக்கின்றது. எனினும் உட்கிடையான நிபந்தனைகளை நிறுவுவதில் நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதால் நுகர்வோர் பாதிப்படைய கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் “வாங்குபவர் கவனமாயிரு” எனும் கோட்பாட்டை இன்னமும் மனதில் வைத்திருக்க வேண்டுமன்றே அறிவுறுத்தப்படுகின்றது.
பொருள் விற்பனை தொடர்பான சட்டங்கள் மூலமான பாதுகாப்பு தொட்டுனர கூடிய பொருட்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருந்தமையால், அமுல்படுத்துதல் தொடர்பில் விரிவான ஏற்பாடுகள் காணப்படாமை, சேவைகள், கடன் விற்பனை தொடர்பில் நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பாடுகள் இல்லாமை போன்ற காரணங்களால் விவாதத்திற்குள்ளாகின. இது தொடர்பில் முதன்முறையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப.; கெனடி காங்கிரஸ் சபையில் 1962 பங்குனி 15 ல் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி விரிவாக உரையாற்றியிருந்தார்.
குறித்த தினமே பின்னாளில் சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் முக்கியமாக 4 நுகர்வோர் உரிமைகளின் அவசியம்; பற்றி தெளிவுபடுத்தினார். பாதிப்பு ஏற்படுதலிலிருந்து பாதுகாப்பதற்கான உரிமை, பொருள்கள் பற்றி அறிவதற்கான உரிமை, தெரிவு செய்வதற்கான உரிமை, பாதிக்ககப்படும்போது முறையிடு செய்ய, வழக்கிடுவதற்கான உரிமை ஆகிய இவரால்; அடையாளப்படுத்தப்பட்டவை அமெரிக்காவின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாக உருவாக்கபபட்டது.
இதனை மேலும் விரிவுபடுத்தி 1985ல் ஐக்கிய நாடுகள் சபை நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பிலான வழிகாட்டல்களை வெளியிட்டது. இவற்றுள் மேலதிகமாக திருப்பதியான அடிப்படைத்தேவைகளுக்கான உரிமை, இழப்பீடு பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் அறிந்திருப்பதற்கான உரிமை, சுகாதாரமான சூழலை அணுகுவதற்கான உரிமை ஆகியவற்றையும் சேர்த்து 8 நுகர்வோர் உரிமைகளை அடையாளப்படுத்தியது.
இங்கிலாந்தில் நுகர்வோர் பாதுகாப்பு
இதன் தொடர்ச்சியாக பல நாடுகள் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் ஏற்கனவேயுள்ள நியதிச்சட்டங்களை திருத்தியும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவதிலும் கவனம் செழுத்தின. நுகர்வோர் பாதகாப்பு தொடர்பில் இங்கிலாந்து சட்டங்களின் வளர்ச்சி குறிப்பிட்டு கூறப்படக்கூடியனவாகவுள்ளது. டொனொக் வழக்கில; (Donoghue v Stevenson [1932] UKHL 100); விற்பனையாளரான பிரதிவாதியிடமிருந்து வாதியின் நண்பன் வாங்கிய மதபானத்தை அருத்தியதால் வாதி பாதிக்கப்பட்டார். தனக்கும் வாதிக்கும் ஒப்பந்த உறவில்லை என வாதிட்ட போதும் உற்பத்திபொருள் நுகர்வோரை அடையும் வரை அது தீங்கு விளைவிக்காது என்பதில் விற்பனையாளர் கவனமாக இருக்கவேண்டும் என நிதியரசர் அற்கின்; கூறி பிரதிhதியின் வாதத்தை மறுத்தார.;
முதலில் 1893 ல் உருவாககப்பட்ட பொருட்கள் விற்பனைச்சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்க 1979ல் புதிய பொருள்விற்பனைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து சட்டத்தில் 1995ல் மேற்கொண்ட திருத்தம் மூலம் ளS.14(2) ல் விற்பனைத்தரம் என்ற சொற்களுக்கு பதிலாக திருப்தியானதரம்(Satisfactory Quality) என்று பதிலீடு செய்யப்பட்டது.
மேலும் s.14(2A) ல் திருப்தியானதரம் என்பதற்கான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை மதிப்பிடுவதற்கு புறவய பரீட்சையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு நியாயமான மனிதனொருவன், பொருட்களின் விவரணம், விலை, ஏனைய பொருத்தமான சூழ்நிலைகளின் ;அடிப்படையில் திருப்பியடைவானாயின் அது திருப்தியானதரம் உடையதாகும்.
S.14(2B) ல் பொருட்களின் தரம் என்பது அதன் நிலையை உள்ளடக்குவதுடன் பொருட்கள் வாங்கப்பட்டதன் நோக்கங்களுடன் பொருந்தும் தன்மை, தோற்றம்(Appearance), சிறு சேதங்கள் இல்லாமலிருத்தல், பாதுகாப்பு(Safty), பாவனைக்காலம்(Durability) போன்ற அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். விற்பனைத்தரம்(Merchantable Quality) நடைமுறையில்; இருந்த காலத்தில் “வாங்கப்பட்ட குறித்த நோக்கத்திற்கு நியாயமான அளவுக்கு பொருந்தகூடிய தன்மை” என்ற அர்த்தத்தில் பொருள்கோடல் செய்யப்பட்டபோதும், திருப்தியானதரம்(Satisfactory Quality) என்றசொல் அறிமுகப்படுத்தப்பட்டபின் குறித்த பொருட்களின் பாவனைக்குரிய சகல சாத்தியமான நோக்கங்களும் கவனத்திலெடுக்கப்பட்டன. இது நுகர்வோர் பாதுபாப்புக்கு மேலும் வலுச்சேர்த்தது.
இதன் தொடர்ச்சியாக 2015ல் உருவாக்கப்ட்ட நுகர்வோர் உரிமைகள் சட்டம் ஒரு குடையான சட்டமாக நோக்கப்படுகின்றது. இது நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில விரிவான ஏற்பாடுகளை உள்ளடக்கியது. இங்கிலாந்தின் பொருள் விற்பனைச்சட்டம் தற்போது வியாபாரம் – வியாபாரம் தொடர்பாகவே ஆளப்படுகின்றது. நுகர்வோர் – வியாபாரம் தொடர்பில் 2015 சட்டத்தாலேயே ஆளப்படுவர். மேலும் டிஜிற்றல் உள்ளடக்கம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கியது முக்கிய அம்சமாகும.;
இதனைவிட இங்கிலாந்தில் வியாபார விவரணச்சட்டம், விரும்பத்தகாத பொருட்கள் சேவைகள் சட்டம், நுகர்வோர் கடன் சட்டம், நிறை மற்றம் அளவீடுகள் சட்டம் போன்ற சட்டங்களும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதில் பங்களிப்பு செழுத்தின.
இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு
இலங்கையில் 2ம் உலகயுத்த காலத்திலிருந்தே நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் முக்கியத்துவம் உணரப்பட்டது. குறித்த யுத்தகாலத்தில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகையில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக உணவு மற்றும் விலைக்கட்டுப்பாடு தொடர்பில் நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டது. 1950ல் உணவு கட்டுப்பட்டுச்சட்டம், விலைக்கட்டுப்பாட்டு சட்டம் ஆகிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் 1979ல் முதன்முதலாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதற்கும் விற்பனையாளர்களை தணடிக்கவும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்(Consumer Protection Act No. 1 of 1979); உருவாக்கப்பட்டது. உள்ளக வியாபார திணைக்களத்தால் இந்த நியதிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின்னர் 1987ல் நியாயமான வியாபார ஆணைக்குழுச் சட்டத்தால் நியாய வர்த்தக ஆணைக்குழு உருவாக்கப்ட்டது. இதன்மூலம் வியாபாரத்தில் சட்டத்திற்க முரணாக போட்டியை தடுத்தல், விலை இசைவை கண்காணித்தல்; போன்றவை ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் பின்னர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச்சட்டம்(The Consumer Affairs Authority Act No 09 of 2003(CAAA) 2003ல் உருவாக்கப்பட்டது. இது ஒப்பீட்டளவில் பரந்தளவில் நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குகின்றது.
இந்த சட்டத்தை விட பின்வரும் சட்டங்கள், நியதிச்சட்ட அமைப்புக்ள் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் நடைமுறையிலுள்ளது.
- உணவுச் சட்டம்
- கடன் விற்பனைச் சட்டம்
- தண்டணை சட்டக்கோவை பிரிவு 265-269
- நியாயமற்ற ஒப்பந்த வாசகங்கள் சட்டம்
- தேசிய சுற்றாடல் அதிகாரசபைச்சட்டம்
- இலங்கை தரக்கட்டளை நிறுவனம்
- புலமைச்சொத்துக்கள் சட்டம்
- தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சட்டம்
- தொலைத்தொடர்புகள் ஒழுங்கபடுத்தும் ஆணைக்குழு
- அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
- இலங்கை காப்புறுதி சபை
- இலங்கை மத்தியவங்கியின் நாணயசபை
- இலத்திரனியல் பரிமாற்றச்சட்டம்
- கொடுப்பனவு உபாயங்களின் மோசடிகள் தடுப்புச்சட்டம்
- மதுவரி சட்டம்
- புகையிலை மற்றும் மதுசாரத்திற்கான தேசிய அதிகாரசபை
- தீங்கியல் சட்டம்
- பொது பயன்பாடுகள் ஆணைக்குழு(20ம் சட்டதிருத்தம் மூலம் நீக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது)
அத்துடன் இலங்கை பொருள்விற்பனை கட்டளைச்சட்டத்திலும்; குறித்தளவு நுகர்வோர் பாதுகாப்பு அம்சங்கள் இனம்காணபபட்டுள்ளது. ஆனால் S.15(2), S.16(2)(C) இலும்; விற்பனைத்தரம் (Merchantable Quality); எனும் சொல்லுக்குரிய வரைவிலக்கணம் தெளிவுபடுத்தப்படாமல் இன்னமும் காணப்படுகின்றமை பின்தங்கிய நிலையாகவே பார்க்கப்படுகின்றது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்;டத்தால் பாதுகாக்கப்படும் உரிமைகள்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (1979) வியாபார நியாய ஆணைக்குழுச்சட்டம்(1987), விலைக்கட்டுப்பாட்டு சட்டம்(1950) என்பன நீக்கப்படடு 2003 ல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச்சட்டம் உருவாக்கப்ட்டது. மைக்ரோ கார் வழக்கில்(Micro Cars Ltd. v. Consumer Affairs Authority (2020)) குற்றமற்ற நுகர்வோரின் அக்கறைகளை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு மேற்படி சட்டம் பொருள்கோடல் செய்யப்படும் எனப்பட்டது..இச்சட்டத்தின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, பாவனையாளர்; அலுவல்கள் பேரவை போன்றன தோற்றுவிக்கப்பட்டது. அது முன்னர் காணப்பட்ட உள்ளக வியாபார திணைக்களம், வர்த்தக நியாய ஆணைக்குழு அகியவற்றை பரதியிடு செய்தது.
அதிகாரசபையானது குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட தலைவரையும் பத்திற்கும் குறையாத உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். மேற்குறித்த சட்டத்தால் உருவாக்கப்பட்ட முக்கியமான அமைப்பு இதுவாகும். குறித்தவிடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் மூன்று பேர் நியமிக்கப்பட்டு அதில் ஒருவர் தலைவராக அறிவிக்கப்படுவர். பேரவையானது அதிகாரசபையின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாக ரிதியாக செயற்படும். போட்டி எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட அதிகாரசபையினால் அனுப்பபபடும் விடயங்கள் தொடர்பில் தனது அவதானத்தை வழங்கும். மேலும் பொருட்களின் விலை, சட்டவிரோத வர்த்தக போக்கு தொடர்பில் புலனாய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும். மேலும் அதிகார சபையானது வியாபாரத்தை ஒழுங்கபடுத்துதல் தொடர்பில் முழுமையான
மேற்பார்வை அதிகாரத்தை கொண்டது. சட்டத்தின் ஏற்பாடுகளை விற்பனையாளர் மீறுமிடத்து நுகர்வோர் நலன் கருதி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச்சட்டம் அதிகார சபையின் குறிக்கோள்களாக பின்வருவன அமையவேண்டும் என கூறுகின்றது (CAAA S 7).
- நகர்வோரின் உயிருக்கும் ஆதனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள், சேவைகளை வழங்குதலை கட்டுப்படுத்தல்
- நியாயமற்ற வியாபார பழக்கவழக்கங்களுக்கெதிராக நுகர்வோரை பாதுகாத்தல்
- நுகர்வோர் நியாயமான விலையில் பொருட்கள்,சேவைகளை பெறுதலை உறுதிப்படுத்தல்
- மட்டுப்படுத்தப்பட்ட வியாபார பழக்க வழக்கங்கள், வேறுவழிகளில் வியாபாரிகளால் நுகர்வோர் பாதிக்கப்படல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்தல். ;
நுகர்வோர் நலன் தொடர்பில் அதிகாரசபை பரந்தளவிலான அதிகாரங்களை கொண்டுள்ளது. விலைச்சுட்டியிடல், பொதியிடல், பொருட்களை உற்பத்திசெய்தல், விற்பனை செய்தல் தொடர்பில் வியாபாரிகளுக்கு பொதுவான வழிகாட்டுதல்களை வழங்கலாம(CAAA S 10(1));. விலைச்சுட்டியை அகற்றதல், மறைத்தல், சுட்டத்துண்டை அகற்றுதல் அல்லது அழித்தல் உட்பட மேற்படி வழிகாட்டல்களை மீறுகின்றவர்கள் தண்டணைக்குரிய குற்றத்திற்குரியவர்கள்(CAAA S 10(4)).
இந்தச் சட்டத்தின் பிரிவு 14 படி அதிகாரசபையானது பொருட்களின் உச்சவிலை உட்பட உற்பத்தி,விநியோகம், களஞ்சியப்படுத்ல், விநியோகித்தல், போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் தொடர்பில் உற்பத்தியாளர்கள்ஃவியாபாரிகளுடன் அவசியமானவிடத்து எழுத்து மூலமான உடன்படிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.
மேலும் பொருட்களை விற்பனை செய்யமறுத்தல்(CAAA S 15), வியாபார நோக்கத்திற்காக உள்ள பொருளை இருப்பில் இல்லையென மறுத்தல்(CAAA S 16), பொருட்களை பதுக்குதல்(CAAA S 17), பொருட்களின் சில்லறை,மொத்தவிலையை அதிகரித்தல்(CAAA S 18) போன்றவை குற்றங்களாக சட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சில அவசியமான நிலைமைகளின்போது அதிகாரசபையின் ஆலோசனையுடன் அமைச்சர் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம் குறித்தொதுக்கப்பட்ட பண்டங்களாக(Specific Goods), சேவைகளாக அறிவிக்கலாம்(CAAA S 18(1)). இவ்வாறு குறித்தொதுக்கப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்ட பின் அதிகாரசபையின் எழுத்து மூலமான அனுமதியின்றி விலையை அதிகரிக்கமுடியாது.
இலங்கையில் அண்மையில் கொரோனா பரவலின் போது பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த அரசாங்கம் கவனம் செழுத்தியது. அந்தவகையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெள்ளை சீனி குறித்தொதுக்கப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதுடன் அதன் உச்ச விலையும் வெளியிடப்பட்டது.
பிரிவு 26ன் படி விற்பனையாளர் விலைச்சுட்டியிடப்படாத விற்பனைக்கு தயாராகவுள்ள பொருட்களின் உச்ச சில்லறைவிலை மற்றும் மொத்த விலை தொடர்பில் அறிவித்தலை காட்சிப்படுத்துவது கட்டாயமானது. அத்துடன் பொருள் விற்பனையாளர் விற்பனைத்திகதி, விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் அளவு, விலை, கொடுக்கல்வாங்கலின் தன்மை (சில்லறைவிற்பனைஃமொத்தவிற்பனை), சட்டத்தால் விதிக்கப்பட்டவாறான ஏதேனும் வேறு தேவைப்பாடுகள் போன்றவற்றை உள்ளடக்கி கொள்வனவாளரால் கோரப்பட்டவுடனே பற்றுச்சீட்டு வழங்கப்படவேண்டும்.
நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்காக அதிகாரசபையானது பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் தொடர்பான நியமங்களை தீர்மானிக்கமுடியும்(CAAA S 12) திரவப்பெற்றோலிய வாயு சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வாயு கொள்கலன்களை நிரப்புதல், மீள்நிரப்பதல், விற்பனை செய்தல் தொடர்பில் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நியமங்களை பின்ப்ற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவற்றைவிட சந்தை நிலைமைகள், பாவனையாளர் அலுவல்கள் தொடர்பில் கற்கைகளை மேற்கொள்ளல், நுகர்வோர் நலன் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடல், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் அதிகாரசபை ஈடுபடுன்றது. அத்துடன் பாவனையாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு தொடர்பில் நுகர்வோர் கல்வியை ஊக்கவிக்கும் செயற்பாட்டிலும் பங்கெடுக்கின்றுது. சந்தையில் போட்டி குறைவாக இருக்குமிடத்து போட்டிவிலைகளை மேம்படுத்துதலிலும் கவனம் செழுத்தும்.
பிரிவு 13 படி அதிகாரசபையானது நுகர்வோரிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யமுடியும். அதிகாரசபையால் விதிக்கப்பட்ட நியமங்களை மீறிய செயற்பாடுகள் விற்பனை தொடர்பில் இடம்பெறும் போது இந்த சர்ந்தப்பம் ஏற்படும். அதனைத்தவிர உட்கிடையாக அல்லது வேறுவகையில் உற்பத்தியாளரால்ஃ வியாபாரியால் கொடுக்கப்பட்ட உத்தரவாதம்ஃகட்டுறுத்து மீறல் தொடர்பிலும் நிகழலாம்.
இது தொடர்பில் நுகர்வோர் 3 மாதத்திற்குள் எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்(CAAA S 13(2)). மைக்ரோ கார் வழக்கில்(Micro Cars Ltd. v. Consumer Affairs Authority (2020)) விற்பனை செய்யப்பட்ட போது உத்தரவாதமளிக்கப்பட்ட நிபர்தனைகளை மீறியமையால் அதிகாரசபையிடம் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்தார். பிரதிவாதி விசாரணைக்கு ஒத்துழைக்காமையால் அதிகாரசபை காருக்குரிய பணத்தினை மீள வழங்கமாறு கட்டளை வழங்கியது. இதனை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த எழுத்தாணை வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
யாருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டதோ அவரையோ அல்லது அவரின் முகவரையோ நேரடியாக தமது நியாயங்களை வழங்க அதிகாரசபை சர்ந்தப்பமளிக்கும்(CAAA S 13(3)). விசாரணையின் பின்னரும் குறித்த மீறல் நடந்தள்ளதென உறுதிப்படுத்தப்படும் போது பெறப்பட்ட தொகையை மீள செழுத்துமாறு விற்பனையாளருக்கு எழுத்திலான கட்டளை வழங்கப்படுவதுடன் பதிவுத்தபாலில் அனுப்பிவைக்ப்பட வேண்டும்(CAAA S 13(5)). பியுச்சர் ஓட்டோ மொபைல் வழக்கில்(Future Automobiles (Private) Limited vs. Consumer Affairs Authority [2012] 1 Sri LR 358) 13ம் பிரிவின் கீழான விசாரனைகள் வெறுமனே விசாரணைகளாக அமையாமல் இயற்கைநீதி விதிகளுக்குட்பட்டதாக நடக்கவேண்டும் என கூறப்பட்டது.
இத்தாலியன் தோரோபிரட் வழக்கில்(Italian Thoroughbred Motor Company (Pvt) Ltd vs. Consumer Affairs Authority) நியாயமான விசாரணை மேற்கொள்ளாமையால் அதிகாரசபையின் கட்டளைக்கு உறுதிகேள் எழுத்தணை வழங்கப்பட்டு 2 மாதத்தின் பின் மீள விசாரித்து கட்டளை வழங்குமாறு மேன்முறையிட்டு நிதிமன்றத்தால் தீர்க்கப்பட்டது. டீசல் அன்ட் மோட்டார் இஞ்சினியரிங் வழக்கில்(Diesel and Motor Engineering PLC vs. Consumer Affairs Authority[2016] CA Writ 43) வாதியானவர் குறித்த வாகன குறைபாட்டுக்கு குறித்த தொகை வழங்கப்படவேண்டும் என அதிகாரசபையால் வழங்கப்பட்ட கட்டளை குறைபாடுடையது என தீர்க்கப்பட்டது. இங்கு சட்டத்தின் பிரிவு 3(4). 8(2) ஆகியவற்றடன் சேர்த்தவாசிக்கும் போது விசாரணையில் குறைந்தது 4 உறுப்பினர்களை உள்ளடக்க
வேண்டும் என கூறுப்பட்டபோதும் குறைந்தளவான உறப்பினர்கள் விசாரனையில் கலந்து கொண்டனர். மேற்படி வழக்குகளிலிருந்து எமது நீதிமன்றங்கள் விற்பனையாளர்களின் அக்கறையிலும் கவனம் செழுத்துகின்றமை புலனாகின்றது.
அதிகாரசபையின் கட்டளையை விற்பனையாளர் பின்பற்றாதுவிடின் குறித்த விற்பனை நிலையம் அமைந்துள்ள நியாயாதிக்கத்திற்குட்பட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரத்தை பெற்றுக்கொடுக்கலாம்(CAAA S 13(6)).
பொதுவாக இழப்பீடு, பொருளை மாற்றிப்பெறல், திருத்தம் செய்து கொடுத்தல், மேலதிகமாக அறவிட்ட தொகை மீளளிக்கப்படல், உத்தரவாத காலப்பகுதி அதிகரிக்கப்படல்;, பொருட்களிலுள்ள குறைபாடுகளை நீக்குதல், சந்தையிலு;ள குறைபாடுடைய பொருட்களை அகற்றுதல் போன்ற நிவாரணங்களை உற்பத்தியாளர்ஃவிற்பனையாளரிடமிருந்து பெறலாம்.
இந்த சட்டத்தில் இணையத்தளம் மூலமான விற்பனை தொடர்பில் ஏற்பாடுகள் எதனையும் உள்ளடக்கவில்லை என்பது முக்கிய குறைபாடாகும். 2019ல் இந்தியாவில் நடைமுறைக்குவந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் இணையம் மூலமான விற்பனைகளுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.