வர்த்தக சட்டம்: இலங்கையில் பாவனையாளர் கடன் சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமைகள்

வர்த்தக சட்டம்: இலங்கையில் பாவனையாளர் கடன் சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமைகள்

இலங்கையில் வாடகைக்கொள்வனவு மூலமான விற்பனைகள் தொடர்பில் பாவணையாளர் கடன் சட்டத்தால்(Consumer Credit Act No. 29 of 1982) ஆளப்படும். இச்சட்டம் நிபந்தனையுடனான விற்பனை மற்றும் வாடகைக்கொள்வனவு ஆகிய இரண்டிற்கும் பொருந்துவதாக உள்ளமை சிக்கலான நிலையை தோற்றுவித்தது.


வாடகை கொள்வனவில் பொருளொன்றுக்கான விலை பகுதிகளாக்கப்பட்டு தவணையடிப்படையில் கொள்வனவாளர் வழங்குவர். பொருளின் உடைமை கொள்வனவாளரிடம் இருந்தாலும் இறுதி தவணைப்பணம் செழுத்திய பின்னரே பொருளின் சொத்துவம் அவரைசேரும்.


வாடகை கொள்வனவாளர் சட்டத்தில் கட்டுறுத்துக்கள் நிபந்தனைகள் தொடர்பில் இலங்கையின்; பொருள் விற்பனை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை ஒத்த உரிமைகளையே உள்ளடக்கியது. அதாவது அமைதியான உடைமை, 3ம் தரப்பினர் எவ்வித கட்டுப்பாட்டையும் கொண்டிராதிருத்தல், வியாபாரதரமுடையதாக இருத்தல், வாங்கப்பட்ட நோக்கத்திற்கு அமைவானதாக இருத்தல், விவரணம், மாதிரி வாடகை கொள்வனவில் அதனை ஒத்ததாக இருத்தல் ஆகிய உட்கிடையான நிபந்தனைகளை உள்ளடக்கியது.


இதற்கு மேலதிகமாக வாடகை கொளடவனவு மீதான விதிப்பனவு தொடர்பில் வரையறை, எந்நேரத்திலும் பொருளை வாங்குவதற்கான உரிமை, எந்தநேரத்திலும் ஒப்பந்தத்தை முடிவுத்துவதற்கான உரிமை,தனது அக்கறைகளை 3ம் தரப்புக்கு கையளிப்பதற்கான உரிமை, 2/2 ற்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை இணைத்தல் போன்றவற்றுக்கு உரித்துடையவராகின்றனர்.

பிரிவு 16ல் பொருட்களை விற்பனையாளர் மீள கையகப்படுத்தும் போது கொள்வனவாளருக்கு பெறக்கூடிய பணத்தின் அளவீடுபற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலையன்ஸ் பினான்ஸ் வழக்கில்(Alliance Finance Limited vs Ilandarige Rohana Pushpakumara, CA Case No: CA 331/98(F) பிரிவு 16 படி கையகப்படுத்திய வாகனத்திற்குரிய நியாயமான விலை மதிப்பிடப்பட்டு அதனடிப்படையில் ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்ட வாடகை கொள்வனவாளருக்கு வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.


பிரிவு 20 படி கொள்வனவாளர் 75% தொகை செழுத்தியிருந்தால் நீதிமன்ற கட்டளையின்றி பொருளை மீளப்பெறமுடியாது. சொந்தக்காரர் சட்டவிரோதமாக பொருளை பெற்றால் ஒப்பந்தம் முடிவறுத்தப்படுவதுடன் வருமதிகள் அனைத்தையும் பெற நீதிமன்றத்தை நாடமுடியும்.

குறுப்பு வழக்கில்(De Silva vs Kuruppu [1941]) வாடகை கொள்வனவில் வாங்கப்பட்ட லொறி ஒன்று தவணைப்பணம் செழுத்தாமையால்; உரிமையாளரால் பலாத்காரமாக கையகப்படுத்தப்பட்டது. அதற்கு உயர்நீதிமன்றம் உரிமையாளர் பலாத்காரத்தை பிரயோகிக்காமல் அவருக்கு உள்ள உரிமைகளான அறிவித்தல் வழங்கல், நீதிமன்றத்தை நாடுதல் போன்றவற்றை பின்பற்றியிருக்க வேண்டும் என்று கூறியது.

றேமன்ட் பெனான்டோ வழக்கில்(Raymond Fernando v Bank of Ceylon (2000) 1 SLR 12) வாடிக்கையாளர் கடன் சட்டத்தின் பிரிவு 18ற்கமைய 2 வார அறிவித்தல்; வழங்காமல் வாகனத்தை கையப்படுத்தியது சட்டவிரோதம் என தீர்த்தது.


இங்கிலாந்து பொருள்விற்பனை சட்டத்தின் பிரிவு 25(1), 25(2) அடிப்படையில் வாடகை கொள்வனவு முறையில் பெற்ற பொருளை 3ம் தரப்புக்கு மீண்டும் விற்றால்; வாடகை விற்பனையாளர் அதனை மீளப்பெறுவதற்கு ஏற்பாடுகள் உன்டு.

அதாவது இந்த ஏற்பாடுகள் வாடகைகொள்வனவிற்கு பொருந்தாது. ஆனால் அது நிபந்தனையுடனான விற்பனை ஒப்பந்தமாக இருந்தால் இந்த பாதுகாப்பு கிடைக்காது. கெல்பி வழக்கில்28 பியானோ உரிமையாளர் வாடகை கொள்வனவு அடிப்படையில் மாதாந்த தவணை கட்டணத்திற்கு விற்பனை செய்தார். கொள்வனவாளர் அதனை அடகுவைத்த போது, அது வாடகை கொள்வனவு என்பதால் அதற்கான உரிமை இல்லை என மறுக்கப்பட்டது.


இலங்கையில் வாடகை கொளவனவு, நிபந்தனையடனான விற்பனை ஒப்பந்தம் ஒரேமாதிரியாக நோக்கப்படுவதால் வாடகை கொள்வனவில் பொருட்களை பெற்றவர் அதனை 3ம் நபருக்கு விற்றபின் 3ம் பொருட்கள் விற்பனை சட்டத்தின் கீழ் அது நிபந்தனையுடனான விற்பனை ஒப்பந்தம் என கூறி பாதுகாப்பு தேட முனையலாம்.

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US