மேனகா காந்தி எதிர் யூனியன் ஒப் இந்தியா – தமிழில் முழுமையான விளக்கம் – பகுதி 3
1. சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை என்ற வாசகத்தின் நோக்கெல்லை இங்கு சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை என்பது சட்டத்தின் மூலம் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை சரியாக பின்பற்றுமிடத்து அது வலிதானதாக கருதப்படும். மாறாக சட்டத்தின் முறையான நடவடிக்கை என்பது குறிப்பிட்ட சட்டம் நியாயமானதாகவும் ஏதேச்சாதிகாரத்திற்கும் வழிகோலாமல் இருக்கின்றதா என்பதை பரிசோதிக்கும். இங்கு முறையான நடைமுறை உயர்நிலை நீதிமன்றங்களுக்கு சட்டத்தை வலிதற்றதாக்குவதற்கு அதிகாரத்தை வழங்குகின்றது. இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட சமயத்திலேயே முறையான நடைமுறை என்ற வாசகம் இந்திய அரசியலமைப்பில் உள்ளடக்கவில்லை. அமெரிக்க அரசியலமைப்பில் […]