சட்டவியல் : அமெரிக்க யதார்த்தவாத பிரிவு -அறிமுகம்
அமெரிக்க யதார்த்தவாத பிரிவை சட்டவியலின் சிந்தனைப்பிரிவாக ஏற்பதில்
குழப்பநிலை காணப்பட்டது. சட்ட அறிஞர் லெவிலின் சட்டம் தொடர்பாக ஆராயும் ஒரு
இயக்கமென்றே(Movement) இதனை கூறினார். இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
அமெரிக்காவில் வளர்ச்சியடைய தொடங்கியது. இது புலனறிவாத குழாம் மற்றும்
சமூகவியல் சிந்தனைப்பிரிவின் சேர்க்கையாகவே கருதப்படுகின்றது.
அமெரிக்க யதார்த்தவாதிகளின் கருத்துப்படி சட்டமானது பாராளுமன்றத்தால்
உருவாக்கப்பட்டதோ அல்லது சட்டஆவணத்தில் காணப்படுவதோ இல்லை. மாறாக
நீதிபதிகளால் வழங்கப்படும் தீர்ப்புக்களிலிருந்தே சட்டம் உருவாகும் என்ற
அடிப்படையிலேயே இவர்களின் கருத்துக்கள் அமைந்தன. சட்டமானது முறையான
தர்க்கரீதியான, கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையாக இருப்பதை இவர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை. அனுபவ ரீதியாக சட்டத்தின் நடத்தையை அவதானிப்பதன்
மூலமே அதன் உள்ளார்த்த பெறுமதியை அறியமுடியும் என கூறியிருந்தார்கள். இதன்
மூலம் சட்டம் தெளிவற்று காணப்படும் போது முற்தீர்ப்புக்களுக்கு கட்டுப்படாமல் புதிய
தீர்ப்புக்களை வழங்கும் சுதந்திரம் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைத்தது.
மேனகாகாந்தி வழக்கு தீர்ப்பில் அமெரிக்க யதார்த்த வாத குழாமின் கருத்துக்கள்
புலப்பட்டன. இந்த வழக்கில் சட்டத்தால் தாபிக்கப்பட்ட நடபடிமுறை மற்றும் சட்டத்தின்
முறையான நடவடிக்கை போன்ற வாசகம் நீதியரசர்களால் பொருள்கோடல் செய்யப்பட்ட
விதம் அமெரிக்க யதார்த்தவாதம் உள்வாங்கப்பட்டமையை எடுத்துக்காட்டுகின்றது.
அமெரிக்க யதார்த்தவாதத்தை அறிமுகப்படுத்தியவராக அறியப்படும் நீதியரசர் ஹோம்ஸ் அவர்களின் கருத்துப்படி உயர்நீதிமன்ற அமர்வில் நீதியரசர் கூறும் சொற்களே
சட்டங்களாக அமையும் என்றார். பொதுவாக சட்டங்களில் இருந்து சட்டப்பிரச்சினைக்கு
தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருப்பதால் இவற்றைத்தவிர மேலதிக சட்டக்காரணிகளும்
கருத்தில் எடுக்கப்படவேண்டும் என கூறினார். எழுத்திலுள்ள சட்டமும்(Written Law)
நடைமுறையிலுள்ள சட்டமும்(Law in Action) வேறுபடுவதாகவும், நீதிபதிகளால்
கூறப்படுவதே சட்டமாக அமையும் என்றார். சட்டமானது காலத்திற்கு காலம்
மாற்றமடைவதால் எழுத்திலுள்ள சட்டங்கள் எப்போதும் பொருத்தமாக இருக்காது என
மேலும் கூறினார். எழுத்துக்களிலுள்ள(Black Letter Approach) சட்டங்களுக்கு
பதிலாக நடைமுறைக்கேற்ப முன்னோக்கி செல்லக்கூடிய அணுகுமுறையில்
(Pragmatic Approach) சட்டத்தின் அபிவிருத்தி செய்யும் முறையினை ஆதரித்தார.
நீதிமன்றங்கள் சட்டவலுவுள்ள கருத்துக்களையே உருவாக்குகின்றன என்றும் நீதிபதிகள்
சட்டத்தை ஆக்குவதில்லை என்ற ஹார்ட் இன் கருத்தை மறுத்த நீதியரசர் ஹோம்ஸ்
நீதிபதிகள் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நீதி, தார்மீககடமை போன்றவற்றை
கருத்தில் எடுத்தே முடிவுக்கு வருவதால் அவை சிறந்த சட்டங்களாக அமையும் என்றார்.
டுவொர்க்கினின் உரிமைகளை நீதிமன்றங்கள் பிரகடனம் செய்கின்றனவேயொழிய அவை உருவாக்கப்படுவதில்லை என்ற கருத்தையும் மறுத்தார்.
அமெரிக்க யதார்த்தவாத குழுமத்தை சேர்ந்த சிப்மன் கரே அவர்களின் கருத்துப்படி
சட்டம் என்பது நபர்களின் உரிமைகள், கடமைகளை தீர்மானிப்பதற்கு நீதிமன்றம்
அறிமுகப்படுத்தும் விதிகள் என்று கூறுகின்றார். பாராளுமன்றத்தால் ஆக்கப்படும்
சட்டங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படும் போது மட்டுமே முறையான சட்டமாக
அமையுமென்றும் அதுவரை சட்டத்தின் மூலங்களாக மட்டுமே கருதப்படும் என்றார்.
அமெரிக்க யதார்த்தவாத குழமத்தை சேர்ந்த கார்ல் லிவெல்லின், சமூகமாற்றம்
வேகமாக இடம்பெறுவதால் அதற்கு ஈடுகொடுக்கத்தக்க தீர்ப்புக்களை நீதிமன்றங்கள்
வழங்குதலே சட்டவாக்கம் என்கிறார். சமூகமொன்றில் நீதியை அடைவதற்கான
கருவியாக சட்டம் இருப்பதாகவும், சட்டம் எப்பொழுதும் முன்னோக்கி பார்ப்பதாகவே
அமையவேண்டும் என்கிறார்.
அடுத்ததாக ஜெரோம் பிராங்கின் கருத்துக்கள் அமெரிக்க யதார்த்தவாதத்திற்கு
சார்பானதாக உள்ளது. இவர் சட்டம் நிலையானதும் மாற்றமடையாததுமான ஒன்று என்ற
கருத்தை ஏற்கவில்லை. அவரது ஆய்வறிக்கையில் நடைமுறை உதாரணங்களுடன்
இந்த கோட்பாடுகளை தெளிவுபடுத்தினார். இவரின் அமெரிக்க யதார்த்தவாத
கருத்துக்களில் முக்கியமானதாக Fathers’ Symbol கோட்பாடு .கருதப்படும். இதன்படி பிள்ளைகள் தமது தந்தையிடம் இருக்கும் போது பாதுகாப்பான சூழல் இருப்பதை நம்புவதை போல நீதிபதிகளின் தீர்ப்பு சட்டங்களிலும் மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர் என்றார். மேலும் யதார்த்தவாதிகளை Rule Skeptics(சட்ட விதிகள் மீதும் சட்ட விதிகள் எந்த எல்லை வரை பிரயோகிக்கலாம் என்பது தொடர்பிலும் சந்தேகம் கொள்வோர்), Fact Skeptics(சட்ட நிகழ்வுகள் மீதும் அவை எந்த எல்லை வரை பிரயோகிக்கலாம் என்பது தொடர்பிலும் சந்தேகம்கொள்வோர்) என இரு வகையாக பிரித்தார்.
அமெரிக்க யதார்த்தவாதத்தை ஆதரிக்கும் வழக்கு தீர்ப்புக்களில் சுகந்தபால மென்டிஸ்
எதிர் சந்திரிக்கா வழக்கு(Sugathapala Mendis & Another v. Chandrika Kumaratunga & Others (Waters Edge Case), (2008) 2 SLR 339) தீர்ப்பு முக்கியமானதாக கருதப்படும். .இங்கு பொது
நோக்கத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்டு பின்னர் வியாபார தேவைகளுக்காக
விற்கப்பட்டது. இலங்கை அரசியலமைப்பு உறுப்புரை 35(1), ஜனாதிபதியாக இருக்கும்
போது தனிப்பட்ட ரீதியில்ஃ பதவியடிப்படையில் செய்தஃசெய்யாமல் தவிர்த்த
செயல்களுக்காக குற்றவியல்ஃகுடியியல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற
விடுபாட்டுரிமையை வழங்கும். எனினும் இந்தவழக்கு தீர்ப்பில் ஜனாதிபதியாக இருந்த
போது செய்யப்பட்ட செயல்களுக்கு காலவரையின்றிய விடுபாட்டுரிமை
வழங்கப்படாதென்றும், அவரும் ஏனைய பிரஜைகளை போல சட்டவாட்சிக்கு உட்படுபவர்
என்பதாலும் பதவிக்காலத்தில் செய்த செயல் அடிப்படைஉரிமைமீறல் என
தீர்க்கப்பட்டது. இங்கு எழுத்திலுள்ள சட்டம் கவனிக்கப்படாமல் நடைமுறையில்
சமூகத்தில் எத்தகைய விளைவை சட்டம் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் எடுத்தே
தீர்ப்பு வழங்கப்பட்டது.
விஸ்வலிங்கம் எதிர் லியனகே வழக்கிலும்(Visvalingam v. Liyanage, (1984) 2 Sri. L.R. 123) தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமையானது அரசியலமைப்பு உறுப்புரை 14(1)(a ) ல் வெளிப்படுத்தப்பட்ட கருத்துவெளியிடும் சுதந்திரத்திற்குள் உள்ளடங்கும் என பரந்தளவான முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டமை அமெரிக்க யதார்த்தவாத பண்புகளை ஒத்ததாகும்.
சுற்றாடல்சட்ட வழக்கான சுன்னாகம் கழிவு எண்ணெய் வழக்கில (Ravindra Gunawardene, Chairman, Centre for Environment and Nature Studies v. CEA and others,
SC FR Application No. 141/2015) சுன்னாகம் பிரதேச மக்களும் நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்த மக்களைபோல சுத்தமான நீரை பெறவதற்கான சட்டரீதியான எதிர்பார்ப்பை(Legitimate Expectation) கொண்டுள்ளனர் என்ற அடிப்படையில் உறுப்புரை 12(1) மீறல் என உயர்நீதிமன்றம் கூறியது. இலங்கை அரசியலமைப்பில் சுத்தமான குடிநீருக்கன உரிமை நேரடியாக உள்ளடக்கபடாத நிலையிலும் இந்த உரிமை ஏற்கப்படட் மை அமெரிக்க யதார்த் ;த வாதத்தின் தாக்கத்தை காட்டுகின்றது.